சியோமி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள எம்.ஐ.மிக்ஸ் ஃபோல்டு மொபைல் போனின் கேமராவில் லிக்யூடு லென்ஸ் டெக்னாலாஜி இடம்பெற்றுள்ளது.

சியோமி நிறுவனம், எம்.ஐ.மிக்ஸ் ஃபோல்டு மொபைலை கடந்த செவ்வாய்க்கிழமை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் போனில் இடம்பெற்றுள்ள கேமாராக்களில் லிக்யூடு லென்ஸ் டெக்னாலாஜி பொருத்தப்பட்டுள்ளது. இந்த டெக்னாலாஜியை சியோமி நிறுவனம் முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. மனித கண் செயல்படும் கோட்பாடுகளின் படி வடிவமைக்கப்பட்ட இந்த லிக்யூடு டெக்னாலாஜி அதன் படியே செயல்படுகிறது.

image

இதன் பின்பக்க கேமராவில் இடம்பெற்றுள்ள லென்சில், மனித கண்ணில் இருப்பது போலவே திரவம் இருக்கும். அதனை ஒரு மென் படலம் ஒன்று மூடியிருக்கும். கேமராவில் இருக்கும் மோட்டார், மிகத்துல்லியமாக அந்த திரவத்தை கையாளுகிறது. இதன் மூலம் கேமராவில் உள்ள வசதிகளை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும். சியோமி போனில் இடம்பெற்றுள்ள மூன்று லென்ஸூகளில், ஒரு லென்ஸ் இதர இரண்டு லென்சுகளின் செயல்பாடுகளை கவனித்துக்கொள்கிறது. லிக்யூடு லென்ஸ் பயனாளர்கள் புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. எல்லா வித சூழ்நிலைகளிலும் பயன்படும் இந்த லிக்யூடு லென்ஸ் 40 டிகிரி முதல் 60டிகிரி வெப்பநிலைகளிலும் செயல்படக்கூடியது.

image

108 மெகாபிக்சல் கேமராவை முதன்மை கேமராவாக கொண்ட இந்த போனில் , 13 மெகாபிக்சல் அல்ட்ரா கேமராவும், 8 மெகாபிக்சல் பயோனிக் கேமராவும் உள்ளது. லிக்யூடு லென்ஸ் 4 விதமான போட்டோகிராபி மோடுகளை கொண்டுள்ளது. வொயிட் பேலன்ஸ், ஆட்டோ ஃபோக்கஸ், ஆட்டோ எக்ஸ்போஷர் உள்ளிட்டவற்றில் அதிவேகம் கொண்ட இந்த மொபைல் போன் வெளிச்சம் குறைவான இடங்களிலும் துல்லியமான படங்களை எடுக்கும் திறன் கொண்டது.

image

700 நிட் பிரைட்னஸ் திறனைக் கொண்ட இந்த போன் 8.01 இன்ச் அளவு மடித்து வைக்கக்கூடிய பேனலை கொண்டது. மற்றொன்று பேனல் 6.52 இன்ச் அளவிலான AMOLED பேனலை கொண்டது. இதன் பிரைட்னஸ் 700 நிட் ஆகும். இவை இரண்டிலுமே டோல்பி விஷன் டெக்னாலாஜி இடம்பெற்றுள்ளது. 888 5ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசசரரை கொண்ட இந்த போன் 16 ஜிபி ரேம் வசதியையும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டுள்ளது.

67வாட் டர்போ சார்ஜரை கொண்ட இந்த போன் 5,020mAh பேட்டரியை உள்ளடக்கியுள்ளது. ஸ்டோரேஜ், ரேம் வசதிகளை பொருத்து மாறும் இதன் விலை 1 லட்சத்திற்கு மேலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த டெக்னாலாஜியை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகிலேயே மொபைல் போனில் லிக்யூடு டெக்னாலாஜியை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையை சியோமி நிறுவனம் பெற்றுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.