தமிழகத்தில் திமுக கூட்டணியும் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் – சி ஓட்டர் கருத்து கணிப்பு கூறியுள்ளது. இந்நிலையில் கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் கருத்துக் கணிப்பு முடிவுகளை தெரிந்துகொள்வோம்.

கேரளாவை பொறுத்தவரை மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி 82 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக கூட்டணி 56 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Maharashtra Assembly Election 2019: Result date, full schedule, counting of  votes, exit poll predictions

அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 67 இடங்களிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி 57 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாடே உற்று நோக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 154 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 107 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ், சி வோட்டர் கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.