சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.75 அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.785ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுவது எப்படி?

Import parity price என்னும் முறையில் எல்பிஜி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் உள்ள எல்பிஜி விலையை பொருத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. சவுதி அரம்கோ நிறுவனத்தின் விலை, எல்பிஜியை பொருத்தவரை பென்ச்மார்க் விலையாக இருக்கிறது. இந்த விலை மூலப்பொருள், போக்குவரத்துக் கட்டணம், துறைமுக கட்டணம், கஸ்டம்ஸ் வரி உள்ளிட்டவற்றை சேர்த்து ஐபிபி விலை நிர்ணயம் செய்யப்படும். இந்த விலை டாலரில் இருக்கும். அதன்பிறகு இதனை ரூபாயாக மாற்ற வேண்டும்.

image

இதற்குப் பிறகு உள்நாட்டு போக்குவரத்து, சிலிண்டர்களில் நிரப்பும் கட்டணம், மார்க்கெட்டிங் கட்டணம், லாபம், டீலர் கட்டணம் இவற்றுடன் ஜிஎஸ்டி சேர்ந்த பிறகு நமக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மெட்ரிக் டன் கேஸ் 230 டாலர் ஆளவில் இருந்தது. ஆனால் தற்போது 450 டாலராக இருக்கிறது. இதனால் ரீடெய்லில் எல்பிஜி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது.ஆனால், இந்தியாவுக்கு தேவையான எல்.பி.ஜியில் பாதி அளவுக்கு மட்டுமே இறக்குமதி செய்கிறோம். மீதம் உள்நாட்டிலே தயாராவதால ஐபிபி-யை அடிப்படையாக கொண்டு ஒட்டுமொத்த சில்லறை விற்பனை விலையை எப்படி நிர்ணயம் செய்ய முடியும் என்று கேள்வி எழுகிறது.

அரசாங்கத்தைப் பொருத்தவரை கச்சா எண்ணெய் விலை குறைந்தால், வரியைக் கூடுதலாக விதித்து வருமானத்தை பெருக்கலாம், விலை உயர்ந்தாலும் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கும் வரிகள் மூலம் தொடர்ச்சியான வருமானம் கிடைத்துவிடும்.ஆனால், தற்போது சம்பள குறைப்பு மற்றும் வேலை இழப்பு ஆகிய காரணங்களால் குடும்பத்தின் நிதி நிலைமை நெருக்கடியில் இருக்கும்போது இதுபோன்ற சிலிண்டர் விலையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

image

வாரம் ஒருமுறையா?

மாதத்துக்கு ஒருமுறை எல்பிஜி விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் இரு முறை எல்பிஜி விலை மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், சர்வதேச சந்தை மற்றும் ரூபாய் ஏற்ற இறக்கத்தை பொருத்து, வாரம் ஒருமுறை விலையை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றன. இதன்மூலம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் சரிவில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன. இது உறுதிபடுத்தப்படாத தகவல்தான் என்றாலும் இதற்கான சாத்தியம் உண்டு.

image

இது குறித்து கவலை தெரிவிக்கும் மக்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையை இப்படித்தான் விலை நிர்ணயம் செய்துவந்தார்கள். அதுபோன்ற சமயங்களில் பெட்ரோல் விலையை இரண்டு ரூபாய் உயர்த்தினால்கூட பெட்ரோல் பங்குகளில் பெரும் வரிசை காத்திருக்கும். தற்போது பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் விலை உயர்வு குறித்து நாம் சிந்திக்க ஏதும் இல்லை என்னும் நிலைக்கு வந்துவிட்டோம். இன்னும் சில காலத்துக்கு பிறகு எல்பிஜி விலையிலும் இதேபோன்ற மனநிலைக்கு நாம் வந்துவிடுவோம் என்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.