மேடையில் பேசும்போது மயங்கிய குஜராத் முதல்வர்…! தாங்கிப்பிடித்த பாதுகாவலர்!

குஜராத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே முதலமைச்சர் விஜய் ரூபானி மயங்கி விழுந்தார்.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விஜய் ரூபானி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிக் கொண்டிருந்த அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதை கவனித்த பாதுகாவலர் உடனடியாக வந்து அவரை தாங்கிபிடித்தார். மேடையிலேயே முதல் உதவி அளிக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Image result for Gujarat Chief Minister Vijay Rupani Faints While Addressing Poll Rally

இதுகுறித்து பாரத் டேஞ்சர் கூறுகையில் “முதலமைச்சருக்கு கடந்த 2 நாட்களாகவே உடல்நிலை சரியில்லை. ஆனால் சனிக்கிழமை ஜாம்நகரிலும், ஞாயிற்றுக்கிழமை வதோதராவிலும் நடைபெற்ற தனது பொதுக் கூட்டங்களை ரத்து செய்வதற்குப் பதிலாக கலந்து கொண்டார். இப்போது அவர் நலமாக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

வதோதரா உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 21 ம் தேதியும், நகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்கள் பிப்ரவரி 28 ம் தேதியும் நடைபெற உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM