சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் அதற்கான விருப்பமனுக்களை விநியோகிக்க அதிமுக தொடங்கியுள்ளது.

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை சட்டப்பேரவைக்கான விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் முதல் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமனுக்கு தமிழ்நாட்டில் 15 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரியில் 5 ஆயிரம் ரூபாயும், கேரளாவில் 2 ஆயிரம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.