“அடுக்கக வீடு…” – ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த கிராமிய கலைஞர் தங்கராசுவுக்கு தமுஎகச முயற்சியால் தமிழக அரசு உதவி!

கடந்த 2018இல் வெளியாகி பரவலாக வரவேற்பை பெற்றது இயக்குனர் மாரி செல்வராஜ் படைப்பில் உருவான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம். அதில் கதாநாயகனின் அப்பாவாக நெல்லையை சேர்ந்த கிராமியக் கலைஞர் ‘நெல்லை தங்கராசு’ நடித்திருந்தார். அவர் நடித்திருந்த காட்சிகளும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் நலிவடைந்து வறுமையினால் குடிசை வீட்டில் வாழ்ந்தது தெரிந்தது. அந்த செய்தியை சமூகவலைத்தளங்களிலும் பதிவாகியிருந்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையினால் தற்போது நெல்லை தங்கராசுவுக்கு உதவி கிடைத்துள்ளது.

image

தமுஎகச மாநிலக்குழு  சார்பில் நாட்டுப்புறக்கலைஞர் நெல்லை தங்கராசு அவர்களுக்கு கலைச்சுடர் விருது கொடுக்க முடிவு செய்தோம். அந்தச் செய்தியை அவருக்குத் தெரிவிக்கச் சென்ற போது அவர் வறுமையில் குடிசை வீடு ஒன்றில் வசிப்பது தெரியவந்தது. அதனை நமது தோழர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு நம் அமைப்பின் சார்பாக அவரது நிலையை கொண்டு சென்றோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அந்த அடிப்படையில் நடந்தவை…

-தங்கராசு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கக வீடு ஒன்றை ஒதுக்கித்தர முன் வந்துள்ளார் ஆட்சியர் விஷ்ணு.

-அவரது மகளுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தற்காலிக வேலைக்கு ஏற்பாடு செய்து தர உத்தரவிட்டுள்ளார்.

-நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர் என்ற அடிப்படையில் தங்கராசு அவர்களுக்கு ஓய்வூதியம் ரூபாய் 3000/- பெற சிபாரிசுக் கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். 

-அவரது வாழ்வாதாரம் சிதைந்த சூழலில் அவருக்கு ஏதேனும் நிதியுதவியை தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா நெல்லை வரும்போது அளிக்கலாம் என்ற அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தோம். இதுவரை 68,000/- நிதி சேர்ந்துள்ளது.

-மாவட்ட ஆட்சியர் 70,000/- ரூபாய்க்கான காசோலையை அவரது மகளிடம் வழங்கினார்.

-தமுஎகச நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு அவர்களுக்கு விருது வழங்கியதன் பின்னணியில் இவ்வளவும் நடந்துள்ளது” ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார் ராமதாஸ் சென்றாயன்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.