மத்திய பட்ஜெட் 2021-22 தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் எதிரொலியாக என்னென்ன பொருள்களின் விலை உயரும், எந்தெந்த பொருள்களின் விலை குறையும் என்பதைப் பார்ப்போம்.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களைவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட், பிரதமர் மோடியின் ஆத்ம நிர்மா பாரத் அல்லது உள்ளாட்டு தயாரிப்புகளை மையமாக கொண்டதாகும்.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. மிக முக்கியமாக ஆல்கஹால், வீட்டு உபகரணங்கள் மற்றும் மொபைல்களின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மத்திய அரசு பல்வேறு விஷயங்களில் வரிகளை குறைத்து அவற்றை மலிவானதாக ஆக்கியுள்ளது. அதன் முழு விவரம் குறித்து பார்ப்போம்.

image

குறிப்பாக பெட்ரோல், டீசல் மீது வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் வரி (ஏஐடிஎஸ்) என்னும் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானம் மீது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அக்ரி இன்பரா செஸ் 100% விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால், மதுபான விலை உயர உள்ளது. அதேபோல இந்த வரி தங்கம், வெள்ளி மீதும் விதிக்கப்பட்டுள்ளது. பாமாயில் மீது 17.5 சதவீத அக்ரி இன்பரா செஸ் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இப்புதிய வரி பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும், பருத்தி மற்றும் பட்டு மீதான சுங்க வரியும் அதிகரித்துள்ளதால், துணிகளின் விலை உயர்ந்து காணப்படும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி மீதான சுங்க வரி 0 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வேக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு. மூலதன செலவினத்திற்கு மட்டும் ரூ.1.77 லட்சம் கோடி ஒதுக்கப்படுள்ளது.

விலை அதிகரிக்கும் பொருள்கள் பட்டியல்:

* பருத்தி
* மொபைல் சார்ஜர்கள்
* ரத்தினக் கற்கள்
* எல்.ஈ.டி.
* எத்தனால்
* கையடக்க தொலைபேசிகள்
* கச்சா பாமாயில்
* கார்கள்
* மின்னணு உபகரணங்கள்
* லெதர் பொருட்கள்
* காலணிகள்
* மொபைல்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள்

விலை குறைபவை:

* சூரிய விளக்குகள் (Custom Solar Lanterns)
* நைலான் உடைகள்
* தங்கம் மற்றும் வெள்ளி
* வெள்ளி டோர் Silver Dore
* ஸ்டீல் பாத்திரங்கள்

image

எவ்வாறாயினும், பெரும்பாலான பொருட்களின் மீது அரசு கூடுதல் வரிச்சுமையை சுமத்தாது என்று நிதியமைச்சர் கூறினார். நிர்மலா சீதாராமன் கூறுகையில், “பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (ஏஐடிசி) விதிக்கப்பட்டதன் விளைவாக, அடிப்படை கலால் வரி (பிஇடி) மற்றும் சிறப்பு கூடுதல் கலால் வரி (எஸ்ஏஇடி) விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன,” என்றார்.

2021-22 பட்ஜெட்டில், தனிநபர்களுக்கான வருமான வரி அடுக்குகளில் மாற்றத்தை நிதியமைச்சர் அறிவிக்கவில்லை. ஒரே மாற்றம் என்னவென்றால், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

– மலையரசு

> பட்ஜெட் 2021 பார்வை: எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை… புரிதலுக்கு சில தகவல்கள்!

> பட்ஜெட் 2021 பார்வை: வருமான வரி செலுத்துவோரை அரசு ‘ஏமாற்றியது’ ஏன்?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.