உலகின் நெம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு தொழிலிலும் பணத்தை செமையாக அறுவடை செய்து வருபவர். அது தான் அவரது வெற்றிக்கும் காரணம். மனித மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 2017 இல் நியுராலிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் முயற்சியில் ஒரு குரங்கின் மூளையை இயந்திரத்துடன் இணைத்துள்ளதாக ‘கிளப் ஹவுஸ்’ என்ற பிரைவேட் சோஷியல் அப்ளிகேஷனில் பேசியதன் மூலம் உறுதி செய்துள்ளார் மஸ்க்.

“ஒரு குரங்கின் மண்டை ஓட்டுக்குள் வொயர்லெஸ் சிப் ஒன்றை பொருத்தி உள்ளோம். இதன் மூலம் குரங்கு மூளைக்குள்ளே வீடியோ கேம் விளையாடுகிறது. அந்த கருவி எங்கே பொருத்தப்பட்டுள்ளது என்பதை யாராலும் கண்டறிய முடியாது. அந்த குரங்கு ஒரு சந்தோஷமான குரங்கு. அதுமட்டுமல்லாது அந்த குரங்கு மைண்ட் PONG விளையாட்டும் அடுத்தவர்களுடன் விளையாடி வருகிறது. 

image

மூளை மற்றும் முதுகெலும்பு காயங்கள் போன்ற நிலைமைகளை குணப்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும். FITBIT போல இந்த சிப்பை அவரவர் மனடிக்குள் பொருத்தி மூளைக்கு கனெக்ட் செய்து கொள்ளலாம்” என்கிறார் அவர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.