‘சூர்யா 40’ படத்திற்கு இவர்தான் மியூசிக் – அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்

இசையமைப்பாளர் தொடர்பான அப்டேட்டை ‘சூர்யா 40’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

‘சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவிருக்கின்றன. ‘சூர்யா 40’ படத்தின் ஹீரோயின் யார் என்று எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில், டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா அருள்மோகன் நடிக்கவிருக்கிறார் என கூறப்பட்டது.

இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தில் இசையமைப்பாளர் தொடர்பான அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் டி.இமான் ‘சூர்யா 40’திரைப்படத்துக்கு இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமானின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இதனை பகிர்ந்து பதிவிட்டுள்ள பாண்டிராஜ், ”இமானுடன் மூன்றாவது முறையாக இணைவதில் மகிழ்ச்சி. அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என தெரிவித்துள்ளார். ‘சூர்யா 40’தொடர்பான அப்டேட்டை சூர்யா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். ட்விட்டரில் #Suriya40 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM