அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்ததையடுத்து, வரும், வருகிற ஜனவரி 20-ம் தேதி, அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

ஜோ பைடன் பதவியேற்பதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னதாகவே டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையை காலி செய்துவிட்டு வாஷிங்டனிலிருந்து விமானம் மூலம் ஃபுளோரிடா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியது. ஃபுளோரிடாவிலுள்ள மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) என்ற தனது பிரமாண்டமான பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேறவிருக்கிறார்.

ஜோ – ஜில் பைடன் தம்பதி

இந்நிலையில், அதிபர் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் இருவரும், பதவியேற்பு விழா முடிந்தவுடன் வெள்ளை மாளிகையில் வசிக்க இருக்கும் புதிய குடும்பத்தினராக அமெரிக்காவின் `ஃபர்ஸ்ட் பேமிலி’ (First Family) அந்தஸ்தைப் பெறுவார்கள்.

ஜோ பைடன், தனது வாழ்க்கை முழுவதிலும், தன் குடும்பத்தினரை முக்கியம் வாய்ந்தவர்களாக மாற்றியுள்ளார். மேலும், சமீபத்திய அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, குடும்ப உறுப்பினர்கள் குறித்து பல இடங்களில் குறிப்பிட்டார். அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலர் மீது சர்ச்சைகள் இருந்தாலும், அமெரிக்க மக்களின் மனங்களை அவரது குடும்பத்திலுள்ள மற்றவர்கள் வென்றனர். தற்போது, அவர் வெற்றிபெற்று வெள்ளை மாளிகையில் குடியேற உள்ளார். அவரோடு வெள்ளை மாளிகையில் வசிக்க இருப்பவர்கள் இவர்கள்தான்.

முதல் பெண்மணி (First Lady)

அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்தைப் பெற்று, வெள்ளை மாளிகையில் வசிக்க இருக்கும் பைடனின் மனைவி ஜில் பைடன் (Jill Biden), ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. பைடனின் முதல் மனைவி மற்றும் அவரது மகள் இருவரும் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

ஜில் பைடன்

அதையடுத்து, ஜில் என்பவரை 1977-ம் ஆண்டு இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் ஜோ பைடன். கார் விபத்தில் இருந்து தப்பிய பைடனின் மகன்களான ஹண்டர் (Hunter) மற்றும் பியூ (Beau) இருவரையும் ஜில் பைடனே கவனித்து வந்தார். பின்னர், பைடன் மற்றும் ஜில் தம்பதியினருக்கு ஆஷ்லே (Ashley) என்ற மகள் பிறந்தார்.

தனது குடும்பத்தைப் பராமரித்து வந்த ​​69 வயதான ஜில் பைடன், இரண்டு மாஸ்டர் பட்டங்களையும், கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.

ஹண்டர் பைடன்

ஜில் பைடன், தனது கணவர் மூன்று முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதும் அவருக்கு பக்கபலமாக வலுவான துணையாக நின்றார். மேலும், சமீபத்திய தேர்தலின்போது அவரது மிகச் சிறந்த வக்கீல்கள் மற்றும் பிரசார வியூகம் வகுப்பதில் வல்லவராக அறியப்படும் ஜிப் பைடனுடன் பயணித்தார் ஜில் பைடன்.

ஜில் பைடன் ஒரு கல்வியாளர் என்பதால் அவர் வெள்ளை மாளிகைக்குள் செல்வதற்கு முன்பே தனது வேலையை மாற்றத் திட்டமிட்டுள்ளார். முதல் பெண்மணிகள் பாரம்பரியமாக சடங்கு, கடமைகளை மட்டுமே நிறைவேற்றுவார்கள், ஆனால், ஜில் பைடன், ஆங்கில பேராசிரியையாகத் தனது முழுநேர வேலையைத் தொடர விரும்புகிறார். முதல் பெண்மணியாக, ஜில் கல்வி விஷயங்களில் பணியாற்றுவார்.

Also Read: அமெரிக்கா: கமலா ஹாரிஸ், செலினா கவுண்டர், விவேக் மூர்த்தி..! -ஜோ பைடன் அரசில் இந்தியர்கள்

முதல் குழந்தைகள் (First Children)

ஜோ பைடன், தனது மகன்களுடனான தனது உறவு, தனது அரசியல் வாழ்க்கையை கட்டியெழுப்பும்போது துக்கத்தை சமாளிக்க உதவியது பற்றியும், அதேபோல் இரண்டாவது திருமணம் பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார். பல ஆண்டுகளாக, செனட்டராக பணிபுரிந்தபோது, ​​டெலாவர் – வாஷிங்டன் இடையே இரண்டு மணிநேரம் ரயிலில் பயணம் செய்தார் ஜோ பைடன்.

ஜோ பைடன்

ஜோ பைடன் மகன் பியூ பைடன், தனது தந்தையின் பொது சேவை நெறிமுறைகளுக்கும் அரசியல் திறன்களுக்கும் வாரிசாகக் கருதப்பட்டார். பியூ, ஈராக்கில் ராணுவத்தில் பணியாற்றினார், பின்னர், டெலாவரின் அட்டர்னி ஜெனரலாகப் பதவி வகித்தார். ஆனால், பியூ 2015-ம் ஆண்டு தன்னுடைய 46 வயதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் உயிரிழந்தார்.

ஜோ பைடனின் மற்றொரு மகன் ஹண்டர் பைடன், கடற்படையில் பணியில் இருந்தார். அவர் மது, போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, பரிசோதனைக்கு பிறகு 2014-ம் ஆண்டு கடற்படையில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் ஹண்டர் பைடனுக்கு வயது 50. இவர் மீது வணிகரீதியாக சட்டவிரோத முதலீடுகள் தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஹண்டர் மறுத்தார். இந்தவிவகாரத்தில், ஜோ பைடன் தனது மகனுக்கு ஆதரவு கொடுக்க மிகவும் யோசிக்கவே செய்கிறார். அதிபர் வேட்பாளர்கள் இடையேயான இறுதி நேரடி விவாதத்தின் போது, ​​ஹண்டரின் போதைப் பொருள் பயன்பாட்டை ட்ரம்ப் கேலி செய்தபோது, ​​ஜோ பைடன், “நான், என் மகனை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று பதிலளித்தார்.

முதல் செல்லப்பிராணிகள் (First Pets)

கடந்த நூறாண்டுகளில் வளர்ப்புப் பிராணியாக நாயை வைத்துக்கொள்ளாத முதல் அதிபராக ட்ரம்ப் இருந்தார், தற்போது ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில், அவரது இரண்டு நாய்களும் குடியேறவிருக்கின்றன.

`Champ’ ,`Major’ என்ற ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாய்களையும், ஒரு பூனையையும் ஜோ பைடன் வளர்ப்புப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்.

ஜோ பைடன்

2008-ம் ஆண்டு முதல் Champ பைடனுடன் இருந்து வருகிறது. ஜோ பைடனின் குடும்பம், 2018-ம் ஆண்டு Major-ஐத் தத்தெடுத்தது வளர்த்து வருகிறது. பைடன் தரப்பினரின் தகவல்படி, Major வெள்ளை மாளிகையில் வசிக்க இருக்கும் முதல் வளர்ப்பு நாயாக இருக்கும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.