“இந்த மாற்றம் வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கான மாற்றம்” – இந்திய கேப்டன் ரஹானே!

இந்திய அணியின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1 – 1 என்ற சமநிலையில் உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து இந்திய அணி பந்துவீசி வருகிறது. “அணியில் மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இந்த மாற்றம் வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கான மாற்றம். இந்த போட்டியை சிறப்பாக தொடங்க விரும்புகிறோம். இந்த போட்டியில் அறிமுகமாகியுள்ள நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் இந்தியாவுக்காக ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டில் விளையாடி அசத்தியவர்கள். இந்த போட்டி எங்களுக்கு முக்கியமான போட்டி. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் வைத்துக் கொள்ளாமல் ஆட்டத்தை நன்றாக அனுபவித்து விளையாடி அதன் மூலம் நல்லதொரு தொடக்கத்தை பெறவே விரும்புகிறோம்.

அஷ்வின், ஜடேஜா, விஹாரி மற்றும் பும்ரா வெளியேறி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக தாக்கூர், மயங்க், நடராஜன், சுந்தர் விளையாடுகிறார்கள்” என கேப்டன் ரஹானே டாஸின்போது தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM