பொங்கலையொட்டி இன்று ’மாஸ்டர்’ படம் வெளியாகியிருப்பதால் கொண்டாட்ட மனநிலையில் உற்சாகமுடன் காணப்படுகிறார்கள் விஜய் ரசிகர்கள். வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்கும், தமிழகத்தில் அதிகாலை 4 மணிக்கும் வெளியான ‘மாஸ்டர்’ உண்மையிலேயே ‘மாஸ்’ காட்டியதா? – இதோ நெட்டிசன்கள் பார்வையில் ’மாஸ்டர்’ விமர்சன தொகுப்பு:

 Fb/ Mohamed muqthar:

“விஜய்ய பிடிக்காத ஆளே இருக்க கூடாதுனு லோகேஷ் பண்ண சம்பவம்தான் மாஸ்டர்…

இது படம் இல்ல மொத்த டிப்ரஷனுக்கும் ஒரு எண்டு”.

 Twitter/ kumar:

 படத்துல #மாஸ்_சீன எடுக்கல…, #மாஸ்_சீன தான் படமாவே எடுத்து வெச்சுருக்காரு லோகி…,

 Fb/Raka simdararakam:

“படம் சற்று நீளம்தான். முதல் அரைமணி நேரத்தை வில்லனை நிறுவ எடுத்துக்கொள்கிறார்கள். அப்புறம் ஒரு விரட்டலில் ஆரம்பித்து அடிதடி கல்லூரி என்று அரைமணி நேரத்துக்கு நாயகனை நிறுவுகிறார்கள். என்றாலும் சலிப்புத் தட்டுவதில்லை.

அதற்குப் பிறகுதான் போட்டி. அவற்றில் அத்துணை திருப்புமுனைகள் இல்லை. நாயகனின் கைதான் ஓங்கிக்கொண்டே போகிறது. அதாவது துணை வில்லன்களைப் போட்டுத் துவைக்கிறார். விஜய்க்குத் தந்திருப்பதைவிட விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது. சிரிப்பு நடிகர் இல்லாத குறைதீர்க்க விஜய்க்கு குடிகாரக் கோட்டித்தன ரோல் வாய்த்திருக்கிறது. நன்றாகவே பண்ணியிருக்கிறார்.

தன்னுடைய கதை என்று மாற்றிமாற்றி, நாயகன் விஜய் சொல்கிற சினிமாக் கதைகளும் சிரிப்பு மூட்டுகின்றன. அவற்றில் ஒன்று ‘காணாமலே காதல்’: “நான் ராஜஸ்தானில் இருந்தேன்; அவள் இங்கிருந்து ஒரு ஸ்வெட்டர் பின்னி, எம்ப்ராய்டரி போட்டு…”

“ராஜஸ்தானில் இருக்கிற ஆளுக்கு ஸ்வெட்டரா…?!” இப்படி.

‘முதற்குற்றம்தான் ஒருவன் தானாகவே செய்வது. மற்றதெல்லாம் மதுவால் வருவது,’ என்கிற தத்துவம் உண்டு.

‘பதினெட்டு வயது வராதவனை சினிமாத் தியேட்டருக்குள் விடமாட்டேங்கிறானே, ஒயின் ஷாப்பில் ஒரு ஆள்போட்டுத் தடுக்கிறானா?’ என்கிற அக்கறையும் உண்டு.

“அரசியலுக்குப் போகப்போறேன். ஒரு கட்சி தொடங்கப் போறேன். அதுல வந்து சேர்ந்துக்குறீயா?” என்று நகையூட்டுகிற முரட்டு வில்லன் விஜய் சேதுபதிக்காகவும் சேர்த்து, ரசிகரல்லாதவர்களும், ஒருமுறை பார்க்கலாம்.

image

Twitter/ Lucifer Morningstar;

”படம் முழுக்கவே விஜய்யோட ஆதிக்கம் தான்.. Screen Presence சான்ஸே இல்ல. வி.சேதுபதி எப்பவும் போல க்ளாஸ்!”.

 Twitter/ கலை: 

  “ஒவ்வொரு சீனும் சும்மா தெறி. Vjs spr வில்லன். கிளைமாக்ஸ்ல செம்ம விருந்து இருக்கு மறக்காம எல்லாரும் தியேட்டர்ல படத்த பாருங்க. இது மாஸ்டர் பொங்கல்

Fb/shiva chellaih:

இங்கு மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் Experimental Films பண்ணிய கார்த்திக் சுப்பராஜ் ரஜினியை வைத்து பேட்ட எடுத்தபோது முழுக்க முழுக்க Experimental- ஐ கைவிட்டு Fanboy Film – என்கிற கோட்பாட்டுடன் ஒரு கமெர்சியல் படத்தை கொடுத்தார், என்ன தான் நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு பேட்ட படத்தின் இரண்டாம் பகுதியில் துளி கூட இருக்காது, மொத்தமாக படத்தை இழுத்து மூடிய கதை தான்,

இதே போல் தான் லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும், முதல் பாதி கதைக்கு மேலாக பயணம் செய்து ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகம் செய்ய நேரம் எடுத்துக்கொண்டாலும் ஒரு கமெர்சியல் படத்திற்கு தேவையான சரியான நடையில் படம் சென்றது, இங்கு முதல் சறுக்கல் படத்தின் நீளம், இரண்டாம் பாதியில் வரும் இரண்டு பாடல்களுக்கும் சில நீண்ட நேர காட்சிகளுக்கும் கத்திரி போட்டு இருந்தால் இரண்டாம் பாதி இன்னும் டைட்டாக திரைக்கதை அமைந்திருக்கும், லோகேஷின் Experimental சண்டை காட்சிகளிலும், விஜய் கதாபாத்திரத்தை வடிவமைத்த விதத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது,

Twitter/praveen 

“மாநகரம் – தரம்

கைதி – சம்பவம்

மாஸ்டர் – தரமான சம்பவம்”.

image

Twitter/Jhon prabhakar

 “இனி வில்லனாவே நடிக்கலாம் விஜய்சேதுபதி. தரமான படைப்பு லோகே”.

 Twitter/சத்தியமூர்த்தி

 “மாஸ்டர் படம் நன்றாக உள்ளது…. மாஸ்டர் படக்குழுவினரின் ஓவர் பில்டப்னால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமே…. இவ்வளவுக்கும் நான் விஜய் ரசிகன் இல்லை”

 Twitter/ aki

அடேய் அடேய் ஒரு No.1 herondra கர்வம் கொஞ்சம் கூட இல்லாம படத்துல அஜித், சூர்யா Reference வெச்சாரு பாருயா!

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.