ராமாயணத்தில் யுத்தகாண்டத்தில் ஒரு காட்சி. இந்திரஜித் பிரம்மாஸ்திரம் எய்கிறான். அதில் ராம, லட்சுமணர்கள் மயங்கிவிட்டனர். அப்போது அங்கு வந்த ஜாம்பவான், விபீஷணரிடம் கேட்டாராம். ‘அனுமனுக்கு ஒன்றும் ஆகவில்லையே…’ என்று. ‘ராமனே தலைவன். அவனை விசாரிக்காமல் அனுமனை விசாரிப்பானேன்’ என்று விபீஷணர் அனுமனிடம் கேட்டாராம். அதற்கு ஜாம்பவான், ‘அனைவரும் சாய்ந்திருந்தும் அனுமன் பிழைத்திருந்தால் நாங்கள் அனைவரும் பிழைத்தவர்களே ஆவோம்’ என்றாராம். அதன்படியே அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து சகலரையும் காப்பாற்றினார்.

தெய்வத்தால் ஆகாது எனினும் தெய்வ பக்தியின் துணைகொண்டு முயன்றால் வெற்றி கிடைக்கும் என்பதனை நிகழ்த்திக் காட்டியவர் அனுமன். அனுமன் வழிபாடு நமக்கு உணர்த்தும் தத்துவங்கள் அநேகம். சிரஞ்சீவியான அனுமனை வழிபடுவதன்மூலம் நாம் அடையும் பலன்கள் ஏராளம். அதிலும் தனுர்ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதத்தில் மூல நட்சத்திர தினமான அனுமன் ஜயந்தி நாளில் வழிபாடு செய்தால் அற்புத பலன்களைப் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

அனுமன்

மனக்குரங்கை வசமாக்கும் மாருதி வழிபாடு!

ஆதி சங்கர பகவத் பாதாள் ஈஸ்வரனிடம் வேண்டும்போது மனத்தை ‘ஹ்ருதய கபி’ என்கிறார். ‘கபி’ என்றால் ‘குரங்கு.’ மனம் வசமாகிவிட்டால் அனைத்தும் வசமாகிவிடும். இந்திரியங்கள் மனதின் தூண்டுதலால் இயங்குபவை. மனம் ஒடுங்கிவிட்டால் இந்திரியங்களும் முறைப்படும். அல்லது ஒடுங்கும். இப்படி வாழும் உயிர்கள் அனைத்துக்கும் பலமாகவும் பலவீனமாகவும் விளங்குவது மனம். அப்படிப்பட்ட மனத்தை வெல்வது எப்படி என்று வாழ்ந்துகாட்டியவர் ஆஞ்சநேயர்.

அந்தக் காலத்தில் முனிவர்கள் மனதை அடக்கக் காடுகளிலும் மலைகளிலும் சென்று தவமியற்றினர். ஆனால் அனுமனோ ராமபிரானுக்குச் சேவை செய்துகொண்டே அதைச் சாதித்தார். அதாவது கடமைகளைச் செய்வதற்கும் மனதை அடக்குவதற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபித்தார். இறைவன் பால் பக்தி செலுத்தினால் மனதை அடக்கி சகல சக்தியும் பெறலாம்.

இந்த உலகில் வேகமாவை வாயு மற்றொன்று மனம். அனுமனோ வாயுவின் புத்திரர் அதே வேளையில் மனதைவிட வேகமாக இயங்கக் கூடியவர். அதனால்தான் அவரை. ‘மநோ – ஜவம் மாருத – துல்ய – வேகம்’ என்று போற்றுகிறார்கள். ஜவம் என்றால் வேகம். மாருதம் என்றால் காற்று. மாருதியை வேண்டிக்கொண்டால், மனக்குரங் அதிவிரைவாக நம் பிரச்னைகளிலிருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கிரக தோஷங்கள் தீர்க்கும் ஆஞ்சநேயர்

சனிபகவான் பார்வையால் துன்பப்படுகிறவர்களுக்கு ஆஞ்சநேயர் வழிபாடு அருமருந்து. சஞ்சீவி மூலிகைத் தேடிப்போன அனுமனைப் பிடிக்க சனிபகவான் பின் தொடர்ந்ததாகவும் அனுமன் அவர் பார்வையிலிருந்து தப்பித்துக்கொண்டதோடு சனிபகவான் எதிர்பாராதபோது அவரைத் தாக்கித் தன் பலத்தால் வீழ்த்தினாராம். அப்போது, தன்னை விடுவிக்குமாறு வேண்டிக்கொண்ட சனிபகவானிடம் ‘ராம பக்தர்களூக்கு ஒரு நாளூம் துன்பம் தரக்கூடாது’ என்னும் வரம் வாங்கிக்கொண்டு விடுவித்தாராம் ஆஞ்சநேயர். எனவே, ஆஞ்சநேயர் பக்தர்களை, ராம நாமம் சொல்பவர்களை சனிதோஷம் பாதிக்காது என்பது நம்பிக்கை. இதற்கு சாட்சியாக ஆம்பூர் அருகே கோயில்கொண்டிருக்கும் ‘வீர ஆஞ்சநேயர்’ பிரமாண்டத் திருமேனியராக தன் காலடியில் சனிபகவானை அடக்கி வைத்திருக்கும் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார்.

வினைகள் தீர்க்கும் புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் #Pudupakkam #VerraAnjaneyarTemple

Posted by VikatanTv on Monday, January 20, 2020

எனவே சனிதோஷம், ஏழரைச் சனி, அஷ்டம சனி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் ஆஞ்சநேயரை வணங்கி வழிபடுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக அனுமன் ஜயந்தி நாளில் அவரை தரிசனம் செய்து வழிபட்டால் சனி தோஷம் விலகி நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மனோகாரகனாகிய சந்திரன் வலிமை இல்லாமல் இருக்கும் ஜாதகக் காரர்களுக்கு மனவலிமை குறைவாக இருக்கும். முடிவுகள் எடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து அனுமனை தியானிப்பதன் மூலம் தைரியமும் நம்பிக்கையும் பெறலாம்.

ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்கள் சஞ்சீவி ஆஞ்சநேயர் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் ஆரோக்கியத்தில் மேம்பாடு அடையலாம்.

அனுமன் ஜயந்தி

அனுமன் ஜயந்தி

இந்த ஆண்டு அனுமன் ஜயந்தி நாளை (12.1.21) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இயன்றவர்கள் ஆலய தரிசனம் செய்து வழிபடுவது சிறந்தது. நாள் முழுவதும் ராம நாம ஜபம் செய்வது மிகவும் பலன்தரும். வீட்டிலேயே வழிபாடு செய்பவர்கள் தவறாமல் ஆஞ்சநேயருக்கு துளசியும் சிறிது வெண்ணெயும் அவர் படத்துக்கு சாத்தி வேண்டிக்கொள்ள வேண்டும்.

பக்தியோடு படைக்கும் எதையும் ஏற்பவர் ஆஞ்சநேயர். அவருக்குப் பிரியமான நிவேதங்கள் வெண்ணெய், வடை, வெற்றிலை, பழங்கள், கற்கண்டு, இனிப்புப் பொருள்கள் என எளிய பிரசாதங்கள் எதுவாகிலும் ஆஞ்சநேயர் அதை அன்போடு ஏற்று அருளக்கூடியவர். உளுந்தினால் செய்யப்படும் நிவேதனங்கள் அனுமனுக்குப் பிரியமானவை மட்டுமல்ல… ராகு தோஷம் தீர்க்கும் பரிகாரகவும் விளங்கும். அனுமனுக்குப் பிரியமானது வடைமாலை.

வெண்ணெய்க் காப்பு மற்றும் வடைமாலை சாத்தியிருக்கும் ஆஞ்சநேயர் திருமேனியை தரிசனம் செய்வது மிகவும் பாக்கியம்.

அனுமனுக்குகந்த அற்புதத் துதிகள்

ஆபத்துக்காலத்தில் அழைத்ததும் ஓடிவந்து காப்பவர் அனுமன். ராம நாமத்தை ஜபம் செய்வதன் மூலம் அவர் அருளைப் பெறமுடியும் என்றாலும் அவருக்கான துதிகளும் அநேகம் உள்ளன. அனுமன் சாலிசா பாராயணம் செய்வதன் மூலமும் கேட்பதன் மூலமும் மன பயம் நீங்கி காரிய ஸித்தி பெறலாம். இது தவிர எளிமையாகச் சொல்லித் துதிக்கவும் சில ஸ்லோகங்கள் உண்டு. அவற்றில் சில…

மநோஜவம் மாருத – துல்ய – வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |

வாதாத்மஜம் வாநர – யூத – முக்யம்

ஸ்ரீ ராமதூதம் சிரஸா நமாமி ||

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||

ஆஞ்சநேயர்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !

வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !

மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !

எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

அனுமன் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

என்னும் காயத்ரி மந்திரத்தை அனுமன் ஜயந்தி நாளில் 108 முறை சொல்லி வழிபட்டால் வேண்டும் வரம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.