திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான நஷ்டத்தை எதிர்கொண்டனர். அத்துடன் ஏராளமான திரையரங்க ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதன்பின்னர், மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அனுமதியளித்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு அன்றைய தினம் தமிழகத்தில் திரையரங்குகளை இயக்க அனுமதியளிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து திரையரங்குகளை திறக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கை பலமுறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர். சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதல்வர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். பின்னர் நடிகர் சிலம்பரசனும், 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு திரைத்துறையினர் சிலர் வரவேற்பை தெரிவித்திருந்தாலும் மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இதனால் கொரோனா விரைவில் அதிக பேருக்கு பரவ வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

Corona prevention; The central government has allocated Rs.15 thousand  crore || கொரோனா தடுப்பு நடவடிக்கை; மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி  ஒதுக்கீடு

இந்நிலையில், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதிமீறல் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், திரையரங்குகளுக்கு வழங்கப்பட்ட 100% அனுமதியை திரும்பப் பெற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்புக்கான மத்திர அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உள்துறை அமைச்சக செயலர் அஜய் பல்லா தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.