மாஸ்டர் ட்ரெய்லரை எதிர்நோக்கும் வண்ணம் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் மாஸ்டர் ட்ரெய்லர் என்ற ஹேஷ்டேக்கை
ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளதாகத் தெரிகிறது. விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு, ‘கைதி’ பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

image

இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாகவே முடிந்த நிலையில் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்ததாக சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் படத்தின் இசைவெளியீடும் நடந்தது. ஆனால் எதிர்பாரதவிதமாக கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் காரணமாக பட வெளியீடு தள்ளிப்போனது. இதனிடையே சூர்யாவின் “சூரரைப் போற்று” ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது. இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தி டீஸர் தீபாவளியன்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

image

ஓடிடியில் மாஸ்டர் வெளியீடா – விளக்கமளித்த தயாரிப்பாளர் நிறுவனம் 

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகுமா என்ற கேள்விக்கு அண்மையில் விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புவதாகத் தெரிவித்தது. இதனிடையே கொரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கையாக 50 சதவீத பார்வையாளர்களுக்கே திரையரங்குகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்களுக்கு வெளியாகும் மாஸ்டர் படத்திற்கு சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரத் தயார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இதனால் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றத் தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியது. இதனால் மாஸ்டர் டீஸரைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லருக்காக விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர்.


மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு எப்போது? 

மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரானது புத்தாண்டுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தத் தகவலனாது வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியிடப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதனை எதிர்நோக்கும் வகையில் தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் மாஸ்டர் ட்ரெய்லர் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அரசானது 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கை இயக்க அனுமதியளித்த போதும், வார நாட்களைத் தவிர்த்து மீதமுள்ள நாட்களில் பெரும்பான்மையான திரையரங்களில் மக்கள் வரத்து மிக மிக குறைவாகவே உள்ளது. இதனால் பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர் படத்தை வைத்து மீண்டும் பார்வையாளர்களை திரையரங்குக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே திரையரங்கு உரிமையாளர்களின் யூகமாக இருக்கிறது.






Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.