இந்தியாவில் களம் கண்டு இன்னும் முழுவதுமாக நான்கு வருடங்களே ஆகவில்லை. ஆனாலும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக வளர்ந்து நிற்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ. சொல்லப்போனால் இந்தியாவில் சந்தாவுக்குத் தொகை பெரும் OTT சேவைகளில் போட்டியென்பது நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இடையேதான் இருக்கிறது.

குறிப்பாக இந்த கோவிட்-19 பொது முடக்கத்தால் இந்தியாவில் சடசடவென வளர்ந்துள்ளன இந்த தளங்கள். ஆனால், இந்த மூன்று தளங்களில் டிஸ்னி ஹாட்ஸ்டாருக்கு மட்டும் எப்போதும் ஒரு கூடுதல் அனுகூலம் உண்டு. அது லைவ் ஸ்போர்ட்ஸ்… அதுவும் குறிப்பாக கிரிக்கெட். ஐபிஎல் மட்டுமல்லாமல் பெரும்பாலான இந்தியப் போட்டிகள் இப்போது ஹாட்ஸ்டாரில்தான் ஒளிபரப்பாகின்றன. சில வெளிநாட்டுப் போட்டிகள் மட்டும் சோனி லிவ்வில் ஸ்ட்ரீமாகின்றன. இறுதியாக இந்தக் களத்திலும் ஹாட்ஸ்டாருடன் போட்டிப்போடத் தயாராகிவிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ.

NewZealand v India

ஏற்கெனவே மற்ற சில நாடுகளில் ப்ரைம் வீடியோவில் லைவ் ஸ்போர்ட்ஸ் உண்டென்றாலும் நியூசிலாந்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான உரிமத்தைப் பெற்று இந்தியாவில் முதல்முறையாக லைவ் ஸ்போர்ட்ஸ் பிரிவில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறது ப்ரைம் வீடியோ. இதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கும் அமேசான் பிரைம் வீடியோ அடுத்த ஆண்டு முதல் 2025-26 சீசன் வரை அங்கு நடக்கும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் இந்தியாவில் தங்கள் தளத்தில் ஒளிபரப்பும். இந்தக் காலத்துக்குள் குறைந்தது இரண்டு முறையாவது இந்திய அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: நெட் ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார்.. சவால் கொடுக்குமா அமேசான் ப்ரைம் வீடியோ! #PlusMinus

அமேசான் ப்ரைம் வீடியோ, அமேசான் ப்ரைம் சந்தாவில் கிடைக்கும் பல சேவைகளில் ஒன்றுதான். ப்ரைம் டெலிவரி, ப்ரைம் மியூசிக் என மற்ற சேவைகளும் இத்துடன் கிடைக்கும். ஆனால், பெரும்பாலானவர்கள் ப்ரைம் வீடியோவுக்காகதான் ப்ரைம் சந்தாவில் இணைகின்றனர். லைவ் ஸ்போர்ட்ஸ் இன்னும் அதிக சந்தாதாரர்களை ப்ரைம் பக்கம் இழுத்துவரும் என நம்பலாம்.

அமேசான் ப்ரைம் வீடியோ

படங்கள், வெப்சீரிஸ் தாண்டி தங்கள் தளத்தை விரிவுபடுத்த அமேசான் தயாராக இருக்கிறது என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாகிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.