பீகார் தேர்தல் முன்னணி நிலவரம்:

ஜே.டி.யு + பா.ஜ.க கூட்டணி – 130

ஆர்.ஜே.டி + காங்கிரஸ்(மகா கூட்டணி) -101

மற்றவை – 012

பீகாரில் பா.ஜ.க முன்னிலை!

நிதிஷ் குமார் – மோடி

பீகார் தேர்தலில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. என்றாலும் தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணி தான் சிறிய அளவில் முன்னிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் பா.ஜ.க கூட்டணி தற்போது முன்னிலை பெற்றிருக்கிறது. தற்போதைய நிலையில், பா.ஜ.க கூட்டணி 125 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எல்.ஜே.பி 7 இடங்களிலும் மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

முக்கியத்துவம் பெறும் `மற்றவை’…!

பீகாரில் ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஆட்சி அமைக்க தேவையான 122 என்னும் மேஜிக் நம்பரை இதுவரை எந்த கூட்டணியும் பெறவில்லை. முன்னணி நிலவரங்கள் இரண்டு கூட்டணிக்கும் மிக நெருக்கமாக இருப்பதால், போட்டி தொடர்ந்து கடுமையாகி வருகிறது. பா.ஜ.க கூட்டணி 110 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டண் 114 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. பாஸ்வானின் எல்.ஜே.பி 9 இடங்களிலும் மற்ற கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால், பீகாரில் ஆட்சி அமைக்கும் சக்தி மற்ற கட்சிகளின் முடிவை பொறுத்து இருக்கும். இதனால், மற்ற `மற்றவை’ என்னும் எண் தற்போது முக்கியத்துவ்ம் பெறுகிறது பீகாரில்…!

பீகாரில் கடும் இழுபறி……!

பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் – ஆர்.ஜே.டி கூட்டணி 113 இடங்களிலும், பா.ஜ.க – ஜே.டி.யு கூட்டணி 112 இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது. பாஸ்வானின் எல்.ஜே.பி கட்சி 9 இடங்களிலும் மற்ற கட்சிகள் 9 இடங்களிலும் முன்னிலையில் இருகிறது.

அனைத்து தொகுதிகளின் முன்னணி நிலவரமும் தற்போது வெளியாகி உள்ளது. முன்னணி நிலவரங்கள் மாறி மாறி வருகிறது. பீகாரில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கிறது பா.ஜ.க?!

சிவராஜ் சிங் சௌகான்!

பீகார் தேர்தல் ஒருபுறம் பரபரப்பை பற்ற வைத்திருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் இடை தேர்தல் முடிவுகளும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 17 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலுக்ம் முன்னிலையில் இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் இதே நிலை நீடித்தால் பா.ஜ.க அங்கு தனது ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னணியில் காங்கிரஸ் கூட்டணி!

பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் – ஆர்.ஜே.டி கூட்டணி 100 இடங்களிலும், பா.ஜ.க – ஜே.டி.யு கூட்டணி 92 இடங்களிலும் முன்னணியில் இருக்கிறது.

இன்னும் 40 இடங்களில் முன்னணி நிலவரம் வெளியாக இருப்பதால், இரு அணிகளுக்கு இடையே கடும் போட்டு நிலவும் என்பதை தற்போதைய முன்னணி நிலவரங்கள் நமக்கு காட்டுகிறது.

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்களை வெல்வது அவசியம்.

பீகாரில் வெல்லப்போவது யார்….?

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் முக்கிய கட்சியாக களத்தில் உள்ளன.

ராஷ்டிரீய லோக் சமதா கட்சி தலைமையில் ஒரு அணியும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. பீகாரின் வால்மிகி நகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் முடிவும் இன்று வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை தேர்தலில் அதிகபடியான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. கூடுதல் எந்திரங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகை மாலை வர ஆகலாம் என்று கூறப்படுகிறது.

பீகார் தேர்தல் களம்

கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆவார் என்று ஆளும் கூட்டணி நம்பிக்கையாக உள்ளது. எனினும் மெகா கூட்டணி வெற்றி பெற்றால் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் ஆவார். அவ்வாறு அக்கூட்டணி ஆட்சி அமைத்தால், இந்தியாவிலேயே மிக இள வயதில் முதல்வர் ஆனவர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பீகார்: `மேஜிக் நம்பர் 122; வெல்லப்போவது யார்?’ – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

மத்தியபிரதேச இடைத்தேர்தலும் முக்கியம்!

தவிர பீகார் சட்டசபை தேர்தலுடன் நாட்டின் 10 மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்று இருந்தது. இந்த தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன. மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முக்கியமானது. ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸில் இருந்து விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நடந்த இடைத்தேர்தலாகும். அவர்கள் விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க அரசு பதவியேற்றது.

சிவராஜ் சிங் சௌகான்

இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான் மாநிலத்தில் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி தொடரும். இதனால் பீகார் தேர்தலை போலவே மத்திய பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும், நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தவிர உத்தரபிரதேசம், அரியானா, மணிப்பூர், கர்நாடகா, ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.