புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த பாலச்சந்திரன் (37). மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தார். ரியல் எஸ்டெட் தொழிலில் இருந்த அவர், கட்டப் பஞ்சாயத்தும் செய்து வந்துள்ளார்.

பாலச்சந்திரனுக்கு வரும் 30-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர், மாத்தூரில் உள்ள தனது தோட்டத்தில் இருந்துள்ளார். அப்போது, கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. காரிலிருந்து முகமூடி அணிந்திருந்த 10 பேர் கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கியிருக்கிறது.

பாலச்சந்திரன்

சுதாரித்துத் தப்பியோட முயன்ற பாலச்சந்திரனை மடக்கிப் பிடித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறது அந்தக் கும்பல். படுகாயமடைந்தவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றிய மாத்தூர் போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது.

Also Read: திருவள்ளூர்: காரில் வந்த 8 பேர் கும்பல் – நடுரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!

பாலச்சந்திரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் அதே பகுதியைச் சேர்ந்த அவரின் முன்னாள் நண்பரான பாலமுத்து, முகமது, ஜெயபிரகாஷ், சேக் அப்துல்லா,பாலாஜி, நந்தகுமார், சதீஷ்குமார், முருகானந்தம், நீலேஷ், சேகர், விக்னேஷ் உள்ளிட்ட 11 பேரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனும்- பாலமுத்துவும் கடந்த பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளனர்.

பாலமுத்து

பாலமுத்து அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கிடையே நட்பில் விரிசல் ஏற்பட்டுப் பிரிந்து சென்றுள்ளனர். இருவருக்கும் இடையில் தொழில் போட்டியும் இருந்துள்ளது. இவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் தான் முன்விரோதம் காரணமாக பாலச்சந்திரனை வெட்டிப் படுகொலை செய்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் போலீஸார் அடைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.