கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமடைந்த யாஷை அவரது மகள் ஐஸ்கிரீம் கொடுக்காமல் ஏமாற்றும் க்யூட் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கேஜிஎப் படம் மூலம் பிரபலமடைந்தவர் கன்னட நடிகர் யாஷ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ராதிகாபண்டித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்ரா என்ற மகளும் யாதர்வ் யஷ் என்ற மகனும் உள்ளனர்.

யஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமல்லாது தனது குழந்தைகளுடன், மனைவியுடன் செலவிட்ட அழகான தருணங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தனது மகனின் பிறந்தநாள் வைபவிழா சம்பந்தமான வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தனது மகள் தனக்கு ஐஸ்கிரீம் கொடுக்காமல் ஏமாற்றும் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் யஷ் மகள் அய்ரா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த யஷ் தனக்கும் ஐஸ்கிரீமை ஊட்டும்படி கேட்கிறார். உடனே ஐஸ்கிரீமை எடுத்த அய்ரா அப்பாவுக்கு ஊட்டுவது போல வந்து அந்த ஐஸ்கிரீமை தானே சாப்பிட்டு விட்டாள். மூன்று நான்கு முறை இவ்வாறு யாஷை, அய்ரா ஏமாற்றியவுடன் அவர்  தனக்கு ஐஸ்கிரீம் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்.

உடனே தனது அம்மாவை அழைத்த அய்ரா அவருக்கு ஐஸ்கீரிமை ஊட்டுவது போல வந்து அந்த ஐஸ்கீரிமையும் தானே சாப்பிட்டு விட்டாள். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட யாஷ் “பகிர்ந்து உண்ணுதல் என்பது அக்கறையானது ஆனால் அது ஐஸ்கிரீமுக்கு ஒத்து வராது. என்னுடைய சொந்த மருந்து இங்குதான் உள்ளது”என்று பதிவிட்டுள்ளார். இந்தப்பதிவு தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.