தற்போதைய காலகட்டத்தில் தெறிக்கவிடும் ஆல் ரவுண்டர்களில் ஒருவர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் தனது திறமையால் அடையாளம் காட்டிக்கொண்டவர். அவர்தான் பென் ஸ்டோக்ஸ். மும்பைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணி கடின இலக்கை சேஸ் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம், ராஜஸ்தான் அணியின் வேற லெவல் ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ்தான்…

யார் இந்த பென் ஸ்டோக்ஸ்? 1991 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி நியூசிலாந்தில் கிறிஸ்ட்சேர்ச் நகரத்தில் பிறந்த இவர், தனது பன்னிரண்டாவது வயதில் வடக்கு இங்கிலாந்திற்குப் புலம்பெயர்ந்து அங்கிருந்த உள்ளூர் அணிகளின் சார்பாக கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். வலதுகை பவுலிங்கும் இடதுகை பேட்டிங்கும் ஸ்டோக்ஸை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது.

Ben stokes News in Tamil, Latest Ben stokes news, photos, videos | Zee News  Tamil

ஸ்டோக்சினுடைய தந்தை ஜெரார்டு ஸ்டோக்ஸ், ரக்பி கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். ஜெரார்டு ஸ்டோக்ஸ் இங்கிலாந்திலுள்ள ரக்பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட காரணத்தினால் பென் ஸ்டோக்ஸ் இளம் வயதிலேயே இங்கிலாந்து வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்டோக்ஸ் 2009 ஆம் ஆண்டில் தி ஓவலில் டர்ஹாமிற்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும், மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட்டர் மார்க் ராம்பிரகாஷின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 2009 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் யு 19 க்கு எதிராக இரண்டு டெஸ்ட்களில் பேட் மற்றும் பவுலிங்கில் சிறந்த முறையில் விளையாடினார். அதில் இவர் அரைசதம் அடித்தார். மேலும், சில விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பின்னர் இவர் 2010 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட தொடரில் விளையாடினார். அப்போது ஸ்டோக்ஸ் இந்தியா யு 19 அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார்.

பென் ஸ்டோக்ஸ்: 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்' - வேதனைகளை சாதனைகளாக மாற்றிய  கதை - BBC News தமிழ்

2010 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்திற்காக முதலில் அறிமுகமானார். அப்போது அரைசதமும் ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இதயடுத்து அயர்லாந்து, இந்தியா போன்ற நாடுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து சார்பில் தொடர்ந்து ஆடத்தொடங்கினார்.

2015 அன்று, ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கின் மெல்போர்ன் ரெனிகேட்ஸில் சில போட்டிகளில் ஜெஸ்ஸி ரைடருக்கு மாற்றாக சேர்ந்தார். 2017 அன்று, ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் தேர்வு அணியின் தலைவர் ஜோ ரூட்டின் கீழ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 அன்று, ஸ்டோக்ஸ் ஐபிஎல் லீக்கில் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியினால் ரூ 14.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்தார் பென் ஸ்டோக்ஸ்!- Dinamani

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் டி 20 போட்டியில் 63 பந்துகளில் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இறந்தார். அதில் 7 பவுண்டரிகள் 6 சிக்ஸர் அடங்கும். தேசிய அணிக்காக திரும்புவதற்கு முன்பாக இவர் 14 போட்டிகளில் 3 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். 2018 அன்று, இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 12.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

வலுப்பெறுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்: பென் ஸ்டோக்ஸ் இணைகிறார் | Stokes to  arrive in UAE on Sunday, will join Royals after six-day quarantine -  hindutamil.in

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் விளையாடி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் இதுவரை 67 டெஸ்ட் மேட்ச் விளையாடி 4428 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 258 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல் ஒருநாள் ஆட்டத்தை பொருத்தவரை 95 போட்டிகளில் விளையாடி 2682 ரன்களை குவித்துள்ளார். 40 ஐபிஎல் போட்டியில் விளையாடி 852 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 107 ரன்களை குவித்துள்ளார்.

கடைசியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் இந்த அதிகபட்ச ரன்களை ஸ்டோக்ஸ் குவித்துள்ளார். பவுலிங்கை பொருத்தவரை டெஸ்ட் மேட்சுகளில் 158 விக்கெட்டுகளையும் ஒரு நாள் போட்டியில் 70 விக்கெட்டுகளையும் ஐபிஎல் போட்டியில் 26 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.