மசாஜ் சென்டர் மற்றும் மதுபானக்கூட வசதிகளுடன் ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் ஜனவரியில் இயக்கப்படுகிறது.

ஆடம்பர சுற்றுலா பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை கடந்த 2008-ம் ஆண்டு முதல் தங்கரதம் சொகுசு சுற்றுலா ரயிலை (கோல்டன் சேரியாட்) இயக்கி வருகிறது. எனினும் பல்வேறு நிர்வாகக் காரணங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ரயில் கடந்த மூன்றாண்டுகளாக இயக்கப்படாமல் இருந்தது.

இந்த ரயில் தற்போது ஐ.ஆர்.சி.டி.சி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இந்த ரயிலில் மசாஜ் மையம், மதுபானக்கூடம், குளியலறைகள், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளும்  உள்ளன. மீண்டும்

image

இந்த ‘தங்கரதம்’ சொகுசு ரயில் கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இதன்படி பிரைடு ஆப் கர்நாடகா என்ற பெயரில் 7 நாள் பயணமாக இயங்கும் ரயில், மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்கா, சிக்மகளூர், ஹம்பி, பட்டடக்கல் மற்றும் கோவாவுக்கு
செல்கிறது. ‘

ஜுவல் ஆப் சவுத்’ என்ற பெயரில் 7 நாள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு ஹம்பி, மாமல்லபுரம், தஞ்சாவூர், செட்டிநாடு, குமரகம் மற்றும் கொச்சிக்கு செல்கிறது. ‘

கிளிம்ப்சஸ் ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 4 நாள் பயணமாக இயங்கும் ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்காவுக்கும், ஹம்பிக்கும் செல்கிறது. இந்த ரயில் பயணத்துக்கு கட்டணச் சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் செலுத்தும் கட்டணத்தில் உணவு, ஏ.சி. பஸ் பயன்பாடு, சுற்றுலாத்தல நுழைவுக் கட்டணங்கள், மதுபானக் கூடத்தை பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்டணம் மற்றும் சலுகை பற்றிய விவரங்களை பயணிகள் அறிந்து கொள்ள 8287931970 மற்றும் 8287931974 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையோ, அல்லது 8287931977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களுக்கு www.goldenchariot.org இணையதளத்தை பயனபடுத்தலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.