தமிழகத்தில் முதன் முறையாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் வெப் சீரிஸ் என்ற பெருமையை பெற்றிருக்கும் ’சென்னைக்கு புதுசு’ ட்ரைலரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்

 தென்னிந்தியாவின் பெண்களுக்கான டிஜிட்டல் தளமான ஜே.எஃப்.டபிள்யூ நிறுவனம் பெண்களை மையப்படுத்திய முதல் வெப் சீரிசை தயாரிக்கிறது. தனது கனவுகளைத் தொடர சென்னைக்கு வரும் ஒரு இளம் பெண் சமையல்காரரின் (chef) பயணத்தை உள்ளடக்கிய இந்தத் தொடர், ஆறு அத்தியாயங்களாக எடுக்கப்படுகிறது. இந்த வெப் சீரியஸ் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் மதியம் 2.30 மணிக்கு ஜே.எஃப்.டபிள்யூவின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

image

 அட் ஹோம், குக் வித் அனுஹாசன் போன்ற வெற்றிகரமான நிகழ்ச்சிகளுடன் ஜே.எஃப்.டபிள்யூ தென்னிந்திய பொழுதுபோக்கு சந்தையில் ஒரு முதன்மை நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. உலகளவில் 22 மில்லியன் பார்வையாளர்களை டிஜிட்டல் ரீதியாகவும் கொண்டுள்ளது. புதுமையான மற்றும் வேடிக்கையான பொழுதுபோக்கு தொடர்களுக்குக்காக இந்நிறுவனம் அறியப்படுகிறது. ’சென்னைக்கு புதுசு’ வெப் டீசரை நடிகை சிம்ரனும் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும் வெளியிட, இதன் ட்ரைலரை ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று வெளியிட்டார். டீசரும் ட்ரைலரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரவேற்பை பெற்றுள்ளன.

 “பெரும்பாலான பெண்கள் சமையலறையை விட்டு வெளியேறுவதற்கான வழிகளைத் தேடுகையில் நீங்கள் ஏன் அதற்குள் நுழைய வேண்டும் என்று கனவு கண்டீர்கள்?’ என்று டீசரில் கேட்கப்படும் கேள்வி எல்லோரையும் சிந்திக்க வைத்துள்ளது.

 

image

இதுகுறித்து கே.எஃப்.டபிள்யூ நிறுவனத்தின் இணை நிறுவனர் பினா சுஜித் பேசும்போது, “ஆரம்பத்திலிருந்தே வலுவான உற்சாகமான ஆர்வமுள்ள பெண்கள் மற்றும் அவர்களின் பயணங்களுக்கு எங்கள் நிறுவனம் உறுதுனையாக இருந்து வருகிறது. ’சென்னைக்கு புதுசு’ கதை ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமையல்கலை துறையில் ஒரு இளம்பெண் சாதிப்பதே மையக்கரு. வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்ளும் இளம் பெண்ணின் சிரிப்பு, சிக்கல்கள், மகிழ்ச்சி, வெற்றி, தோல்விகள், உணவு மீதான முழு அன்பு ஆகியவற்றை இதில் காணலாம்” என்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.