நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கடந்த 2002-ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு அவர் நடித்தப் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கவே சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். அவர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு கடைசியாக ’நாணயம்’ படம் வெளியானது.

image

அதன்பிறகு நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு நாய்கள் ஜாக்கிரதை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஜாக்சன் துரை, போக்கிரி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது, பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி மொத்த படத்தையும் முடித்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், நேற்று சிபிராஜின் பிறந்தநாளையொட்டி நடிகர் சூர்யா கபடதாரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.