எகிப்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை பார்வையாளர்கள் பலரின் முன்னிலையில், பழமையாக மம்மி சவப்பெட்டி ஒன்றை திறந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

மெம்ஃபிஸ் என்ற இடத்தில்தான் எகிப்தியர்களின் மிகப்பழைமையான கல்லறைகள் உள்ள சக்யுரா என்ற பகுதி உள்ளது. எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி அமைச்சகம், இந்த பகுதியிலிருந்து 59 மர சவப்பெட்டிகளை தொல்பொருள் ஆராய்ச்சிக்காக எடுத்துள்ளது. அந்தப் பகுதியில், போதகர்கள், உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தலைவர்களின் உடல்களை வைத்திருக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை, 2500 வருடங்களுக்கு மேல் பழைமையான ஒரு சவப்பெட்டியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் திறந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த பெட்டிக்குள் பிரத்யேகமாக உடல் அடக்கம் செய்வதற்கு தயாரிக்கப்பட்ட துணிகளில் சுற்றப்பட்ட மம்மியின் சடலம் ஒன்று இருப்பது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ ட்விட்டரில் 9 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. பலர் இதற்கு எதிர்ப்புகளையும் தெரிவித்துள்ளனர்.

3,000 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காட்டுக்குள் வந்த டாஸ்மேனியன் டெவில்..! 

இதுபற்றி எகிப்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், சக்யுரா பகுதியில் முதலில் ஒரு சவக்குழியிலிருந்து 13 சவப்பெட்டிகளை எடுத்ததாகவும், பிறகு மற்றொரு குழியிலிருந்து 14 பெட்டிகளையும் இப்படி மொத்தம் 59 பெட்டிகளை ஆராய்ச்சிக்காக எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவற்றை நியூ கிராண்ட் எகிப்தியர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.