தமிழ் சினிமாவில் தனுஷுடன் அநேகன் படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர் , ஊரடங்கு காலத்தில் பல பெண்களுக்கு தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் பல உதவிகள் செய்துவந்தார். சமீபத்தில் மூன்று பெண் குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதும் ஏற்றுக்கொண்டார். இதுபற்றி கூறிய அவர், என் வாழ்க்கையில் அது மிகப்பெரிய முடிவு என்று தெரிவித்துள்ளார்.

“இந்தப் பெண்கள் மிகச்சரியான கல்வியைப் பெறுவதற்கு ஒரு தொண்டு நிறுவனம் மூலம் உதவிகள் செய்தேன். இந்தியாவில் உள்ள பெண்களாகிய நாம், ஒவ்வொரு பெண்ணும் உயர்வை அடைவதற்கான உதவியாக இருப்பது கடமை என்று நினைக்கிறேன்” என்கிறார் அமிரா தஸ்தூர்.

image

“மக்களுக்கு வெறுமனே பணமும் உடைகளும் கொடுப்பதல்ல, ஆனால் அந்தப் பணம் நல்ல விஷயங்களுக்குப் பயன்படவேண்டும். இந்தப் பெண்களின் ஓர் ஆண்டுக்கு பள்ளி செல்வார்கள். நான் உதவி செய்துள்ளேன். அடுத்த ஆண்டு கல்விக்கட்டணம் மாறுபடும். அவர்களுக்கான கல்விக்கு நான் உதவி செய்கிறேன்” என்கிறார் 27 வயதான அமைரா தஸ்தூர்.

image

மேலும், “ஒரு நாளின் முடிவில் இந்தியாவில் மகள்களான நாம், மற்ற இந்திய மகள்களின் உயர்வுக்கு உதவவேண்டும். பெண் குழந்தைகளுக்கான கல்வி என்பது அதன் சிறந்த வழிகளில் ஒன்று” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

’செயலிகளுக்கான ஆக்ஸிஜனை கூகுள் கட்டுப்படுத்துகிறது’: பேடிஎம் சிஇஓ குற்றச்சாட்டு

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.