தனது புதிய படத்தின் தலைப்பையும் அறிவிப்பையும் இன்று  ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், நடிகர் பகத் பாசில்.

தொடர்ச்சியாக தனது படங்களுக்கு தேசிய விருதுகளைக் குவித்த மலையாள சினிமாவின் பிரபல இயக்குநர் திலீஷ் போத்தன் இயக்கத்தில் பகத் பாசில் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்திற்கு ‘ஜோஜி’ என்று பெயடப்பட்டுள்ளது.

image

மலையாளத்தில் நடிகராக மட்டுமே அறியப்பட்ட திலீஷ் போத்தன் கடந்த 2016 ஆம் ஆண்டு பகத் பாசிலின் ’மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் இயக்குநரானார். இப்படத்திற்கு சிறந்த திரைக்கதை மற்றும் மலையாளத்தின் சிறந்த படம் ஆகிய பிரிவுகளில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததோடு சிறந்த இயக்குநருக்கான மாநில விருதுகளையும் குவித்தார் திலீஷ் போத்தன்.

image

தேசிய விருதின் புதுத்தெம்பில் தனது அடுத்தப் படமான ’தொண்டிமுதலும் திருச்சாட்சியும்’  படத்தினையும் பகத் பாசிலை வைத்தே இயக்கி வெற்றியும் கண்டார். இப்படத்திற்காக, பகத் பாசிலுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது, இவர்களின் நட்பு மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனைப் படைத்த கும்பளங்கி நைட்ஸ் படத்தினையும் தயாரிக்க வைத்தது. இந்நிலையில், மூன்றாவது முறையாக திலீஷ் போத்தன் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பையும் தலைப்பையும் இன்று வெளியிட்டுள்ளார் பகத் பாசில்.

image

திலீஷ் போத்தன்

திலீஷ் போத்தனின் ’மகஷின்டே பிரதிகாரம்’ படத்தைதான் தமிழில் உதயநிதி நடிக்க ‘நிமிர்’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பகத் பாசில், திலீஷ் போத்தன் கூட்டணி தொடர் வெற்றிகளையும் விருதுகளையும் குவித்தது என்பதால், மூன்றாவது  படத்திலும் ஹாட்ரிக் வெற்றியையும் விருதுகளையும் குவிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.