பைக் ரேஸின் போது ஏற்பட்ட விபத்தில் இருந்து வெலண்டினோ ரோஸி நூலிழையில் உயிர் தப்பினார்

பைக் ரேஸின் சூப்பர் ஸ்டார் வெலண்டினோ ரோஸி. இத்தாலியைச் சேர்ந்த இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. அதிவேகத்திற்கு பெயர் போன இவரின் பைக் எண் 46. பைக் ரசிகர்கள் பலரும் தங்களது வாகனத்தில் கூட 46 என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ள இவர் மீதான அன்பே காரணம். இப்படி பல கோடி ரசிகர்களை கொண்ட ரேஸர் நேற்று மரண பயத்தை உணர்ந்துள்ளார். ஆஸ்திரேலியன் கிரெண்ட் ப்ரிக்ஸ் வகை பைக் ரேஸ் நேற்று நடைபெற்றது.

image

அதிவேகமாக பைக்குகள் பாய்ந்துகொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக பிரான்கோ மற்றும் ஜாகான் ஆகிய வீரர்கள் பைக்குகள் மோதி
மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. விபத்தில் தடுமாறிய பைக்குகள் ஓடுபாதையில் அதிவேகமாக உருண்டு சென்றன. கிட்டத்தட்ட 300கிமீ
வேகத்தில் பின்னால் வந்த வெலண்டினோ ரோஸியின் பைக் மிக நெருக்கமாக சென்று விபத்தில் இருந்து தப்பித்தது. விபத்துக்குள்ளான
பைக்கில் ரோஸியின் பைக் மோதி இருந்தால் மிகப்பெரிய விபரீதத்தை அவர் சந்தித்து இருக்க வேண்டுமென பலரும் தெரிவித்துள்ளனர்.

image

இது குறித்து தெரிவித்துள்ள ரோஸி, நான் நடுங்கிவிட்டேன். அதிக பயம் உண்டாகிவிட்டது.என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய ரிஸ்க்
இது. நான் ஒரு நிழலைப் பார்த்தேன். சில நேரங்களில் போட்டியின் போது மேலே ஹெலிகாப்டர்கள் பறக்கும். அதன் நிழல் என நினைத்தேன்.
ஆனால் அது பைக்குகள் நிழல் என தெரிவித்துள்ளார். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.