கொரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உடற்பயிற்சிகள் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகை கேத்ரினா கைஃப் தனது உடல் ஆரோக்கியத்தை காக்க மும்பை வீதிகளில் தனது நண்பருடன் சைக்கிள் ஓட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு நிற டி சர்ட், தொப்பி, மாஸ்க், கிளவுஸ் அணிந்துகொண்டு மும்பையின் பிரதான சாலைகளில் சைக்கிள் ஓட்டியுள்ளார்.image

இதேபோன்றுதான், நடிகர் சல்மான்கானும் தெருக்களில் சைக்கிள் ஓட்டி உடற்பயிற்சி செய்கிறார். மேலும், மற்றொரு பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் சண்டிகரின் சாலைகளில் சைக்கிள் ஓட்டி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். ஊரடங்கிற்கெல்லாம் முன்பிருந்தே தமிழகத்தில் நீண்ட வருடங்களாக சாலைகளில் அதிகாலையில் சைக்கிள்  ஓட்டி உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி வருபவர் நடிகர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.