தனுஷூடன் நடிக்க விருப்பப்படுவதாக கூறி ட்விட்டரில் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்த நடிகை மாளவிகா.
‘மாளவிகா மோகனன்’…ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, ஒரே படத்தின் மூலம் மாஸ் ஹீரோயினாகியுள்ளார். இன்னும் மாஸ்டர் ரிலீஸாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே அவருக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பும் வந்துவிட்டது. தற்போது, பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ள மாளவிகா மோகனனுக்கு சம்பளம் 5 கோடி ரூபாய்.
Wishing you a very Happy Birthday and an amazing year ahead @dhanushkraja sir! ? Super excited to work with you!(hopefully someone will cast us together in a film soon?)
— malavika mohanan (@MalavikaM_) July 28, 2020
இந்நிலையில் நேற்று நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு பல்வேறு திரைப்பிரபலங்களும் வாழ்த்து கூறி வந்தனர். இதில் நடிகை மாளவிகா மோகனனும் வாழ்த்து கூறியிருந்தார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் “பிறந்தநாள் தனுஷ் சார். இந்தாண்டு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் பணியாற்ற ஆர்வமுடன் காத்திருக்கிறேன். (யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்)” என குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM