சூப்பர் ஸ்டாரின் எந்திரன், இளைய தளபதியின் தெறி, மெர்சல், பிகில், மாஸ்டர்  உள்ளிட்ட படங்களிலும் தனுஷின் புதுப்பேட்டை, வடசென்னை உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் வில்லனாக நடித்துள்ளவர் நடிகர் சாய் தீனா.  இவர், தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று காலையில் ஸ்டைலிஷ் லுக்குடன் பகிர்ந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

image

தனது ஸ்டைலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளவர், ”எல்லாவற்றிற்கும் ஒரு அழகு இருக்கிறது. ஆனால், அதைனைப் பார்ப்பதில்லை” என்று கூறியிருக்கிறார். பெரும்பாலான படங்களில் வில்லனாக லுங்கியுடன் வரும் சாய் தீனா, இப்புகைப்படத்தில் ஆஃப் ஒய்ட் கலரில் கோட் ஷூட்டுடன் ஸ்டைலிஷாக இருப்பது பாராட்டுகளைக்  குவித்துள்ளது. மேலும், படத்தில்தான் சாய் தீனா வில்லன் நடிகர். ஆனால், நிஜத்திலோ ஹீரோ.  கொரோனா சூழலில் ஏழ்மையான 250 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியுடன் சேர்த்து மளிகைப்பொருட்களையும் கொடுத்து உதவிய நல்லுள்ளம் கொண்டவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.