இன்றைய டிஜிட்டல் தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் ஆர்டிபிஷியல் இன்டலிஜன்ஸ் (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நொடிக்கு நொடி வீடியோ கேம்களும், ஆன்லைன் கேம்களும் உலகளவில் அதிகம் விளையாடப்பட்டு வரும் வேளையில் 2018-இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில், டெமோ ஈவென்ட்டாக eSports விளையாட்டு இடம் பெற்றது. அதன் பிறகு எல்லோரது கவனத்தையும் தன் பக்கமாக ஈர்த்தது இந்த விளையாட்டு. 

image

கொரோனா ஊரடங்கு சமயத்திலும் eSports கேமர்கள் விர்ச்சுவல் உலகில் ஆக்டிவாக விளையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கால்பந்து முதல் கார் பந்தயம் வரை அனைத்துமே இதில் உள்ளது. அதென்ன eSports? 

“வீடியோ கேம் கலாச்சாரத்தின் அடுத்தகட்டம் தான் eSports. முழுவதும் டிஜிட்டல் டிவைஸ்களை பயன்படுத்தி ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் விளையாடப்படும் விளையாட்டு. இதில் வீரர்கள் குழுவாகவும், தனி நபராகவும் விளையாடலாம்.

image

கேமின் டிசைனை கம்யூட்டரில் புரோகிராம் செய்திருந்தாலும் கேரக்டரை அடிப்படையாக கொண்டு விளையாடப்படும் விளையாட்டு. ரியல் டைம் ஸ்ட்ரேட்டிஜியை கொண்டு விளையாட்டுக்கு தேவையான அத்தனை அம்சங்களும் இதில் அடங்கியிருக்கும். 

ஆரம்பத்தில் அமெச்சூர் அளவில் உலகின் வெவ்வேறு இடங்களில் தனி நபராக விளையாடப்பட்டு வந்த டிஜிட்டல் கேம்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் புரொபஷ்னல் லெவலுக்கு வளர்ச்சி பெற்றது. அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களிலும் மற்றும் சீனாவிலும் அதிகம் விளையாடப்பட்டு வரும் இவ்விளையாட்டு இந்தியாவிலும் கவனத்தை பெற்று வருகிறது. 

image

அதனால் இதில் அசத்த விரும்பும் பிளேயர்ஸ்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு என பிரத்யேகமாக பயிற்சி மையங்களும் இந்தியாவின் பெரு நகரங்களில் செயல்பட்டு வருகின்றன.  இருந்தாலும் இதன் டோர்னமெண்ட்களில் எப்படி கலந்து கொள்வது என்ற விவரங்கள் பொதுவெளியில் உள்ள பிளேயர்ஸுக்கு பரவலாக தெரியாததும் ஒரு சிக்கலாக உள்ளது. ஆனால் மெல்ல அந்த சிக்கல் தீரும். அடுத்தடுத்த ஆண்டுகளில் eSports பிளேயர்ஸ் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நம்பர் ஒன் இடத்திற்கு கூட முன்னேறலாம்” என தெரிவித்துள்ளார் இந்திய eSports கூட்டமைப்பின் இயக்குனர் லோகேஷ் சுஜி. 

image

இந்தியாவில் இந்த விளையாட்டு முக்கியத்துவம் பெற்று வருவதற்கு காரணம் 2018 ஆசிய விளையாட்டு போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தது தான். ரியல் டைம் சிமுலேஷன் ஸ்போர்ட்ஸ், ஃபைட்டிங், அட்வெஞ்சுரஸ் என ஒவ்வொரு ரக விளையாட்டும் வரவேற்புகள் பெற்றுள்ளன. சில தனியார் அமைப்புகள் இந்தியாவில் இந்த விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் டோர்னமெண்ட்டுகளை நடத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற விளையாட்டுகளுக்கு கிடைப்பது மாதிரியான ஸ்பான்சர்ஷிப்பும், அரசாங்கத்தின் ஆதரவும் இதற்கு கிடைத்தால் உலகளவில் ‘டானுகெல்லாம் டானாக’ இந்தியா உருவாகும் என சொல்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள். இருந்தாலும் 2022 ஆசிய போட்டிகள் மற்றும் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் (டெமோ ஈவென்ட்) இந்த விளையாட்டு இடம்பெறும் என எதிர்பார்த்த சூழலில் அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.