நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில் மத்திய அரசின் ‘இ-சஞ்ஜீவனி’ மூலம் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் வழியாக மக்களுக்கு இலவச மருத்துவம் பார்த்து வருகின்றனர் மருத்துவர்கள். 

image

இந்தியா முழுவதும் ‘இ-சஞ்ஜீவனி’ மருத்துவ சேவையை மக்கள் பரவலாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். 

இணையதளம் மற்றும் மொபைல் போன் அப்ளிகேஷன் மூலமாகவும் இ-சஞ்ஜீவனியை பயன்படுத்தலாம்.

மெயில் ஐடி உருவாக்குவது போல பெயர், முகவரி, வயது, பாலினம், மொபைல் எண் என அனைத்து விவரங்களையும் கொடுத்து பயனர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கான டோக்கன் எண்ணை ஜெனெரேட் செய்ய வேண்டும். 

image

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும் டோக்கன் எண்ணை கொண்டு நோயாளிகளுக்கான லாக்-இன் ஆப்ஷனை பயன்படுத்தி லாக்-இன் செய்ய வேண்டும்.

நம் ஊர் கிளினிக்கில் இருப்பது போல மருத்துவருடன் பேச ஆன்லைன் க்யூவில் காத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். நமக்கான வாய்ப்பு வரும் போது ‘கால் நவ்’ பட்டனை அழுத்தி மருத்துவரிடம் உரையாடலாம். அவரிடம் உடல் உபாதையை எடுத்து சொல்லலாம். நாட்பட்ட நோய் என்றால் இதற்கு முன் மருத்துவரிடம் பெற்ற அறிக்கைகளையும் சமர்ப்பிக்கும் ஆப்ஷன் இதில் உள்ளது. பரிசோதனைக்கு பிறகு மருத்துவர் கொடுக்கும் ஆன்லைன் மருந்து சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. 

தமிழகத்தில் இந்த சேவையை  காலை 8 முதல் இரவு 8 வரை அனைத்து நாட்களிலும் பயன்படுத்தலாம்.  

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.