கொரோனாவால் வேலையிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருப்போரின் எண்ணிகைக் கூடிக்கொண்டே போகிறது. இச்சூழலில், வீட்டிலிருந்தபடியே 500 ரூபாய் முதலீட்டில் பணம் சம்பாதிக்கும் கைத்தொழில்களை கற்றுத்தருகிறார் சென்னை கே.கே.நகரைச்சேர்ந்த  ‘சுகா’ அறக்கட்டளையின் தலைவர் உமாராஜ்.

என்னென்ன தொழில்கள் செய்யலாம்? அவரிடம் நாம் பேசியபோது, “தொழில்கள் செய்ய அதிக முதலீடுகள் தேவையில்லை. தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால்போதும். அந்த, தன்னம்பிக்கையால்தான், இதுவரை 5,000 த்துக்குமேற்பட்ட பெண்களுக்கு சிறுதொழில் பயிற்சி அளித்துள்ளேன். எனது சுகா ட்ரஸ்டிலேயே அமைந்துள்ள சிறிய இடத்திலேயே இத்தனை வருடங்கள் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் சணல் பை, துணிசோப்பு, குளியல் பவுடர், குஷன் பில்லோ, ஸ்க்ரீன் பிரிண்டிங், ரோஸ் மில்க், குங்குமம், ஐஸ்கிரீம், மசாலா பொடி, அப்பளம், பெருங்காயம், சோப் ஆயில், எம்ப்ராய்டிரிங் உள்ளிட்ட 50 க்குமேற்பட்ட சிறுதொழில்களை நேரடியாக கற்றுக்கொடுத்து வந்தேன். ஆனால், இந்த கொரோனா சூழல் என்னையும் முடக்கிவிட்டது

image

நேரில், யாருக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை. ஒருமாதமாக வீட்டிற்குள் முடங்கியிருந்தேன். ஆனால், நிறைய பெண்கள் ஃபோன் செய்து என்ன செய்யலாம்? என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போதுதான், ’வோர்ல்டு விஷன்’ என்கிற அமைப்பு  ‘மாஸ்க்’ செய்வது எப்படி என்று என்னிடம் ஸூம் மீட்டிங் மூலம் கேட்டார்கள்.  அப்படி சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துதான். அதிலிருந்து, ஏற்கனவே கொடுத்திருந்த அனைத்துவிதமான பயிற்சிகளையும் ஸூம் மீட்டிங் மூலம் கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறவர்,  தற்போது பெருங்காயம், குங்குமம், சாம்பிராணி, துணிசோப்பு போன்ற அத்திவாசிய பொருட்களை வீட்டிலிருந்தபடியே தயாரிப்பது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறார்.

   “எனது கணவர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரிகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற நினைத்தேன். முதன்முதலில் சணல் பை செய்யத்தான் கற்றுக்கொண்டேன். நன்கு பயிற்சிபெற்றதால் அரசு சணல் வாரியத்தின்மூலம் அனைத்து கிராமங்களுக்கும் சென்று பெண்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளேன். அப்போதுதான், சிறுதொழில் என்றாலே நிறைய முதலீடு தேவை, நிறைய பணம் தேவைப்படும் என்ற தவறான புரிதல் கிராமப்புற பெண்களுக்கு இருப்பது தெரியவந்தது. அதையெல்லாம், உடைக்கத்தான் 500 ரூபாய் முதலீட்டிலிருந்தே சிறுதொழில் தொடங்கலாம் என்று உற்சாகப்படுத்தினேன்.

image

பயிற்சிகளை வீடியோ கால் மூலமே கற்றுக்கொள்ளலாம். கொரோனா வறுமை பேரிடரையும் வெல்லலாம்” என்று வழிகாட்டி பேசும் உமாராஜ், சென்னை தரமணியிலுள்ள அரசு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில், தனது சுகா அமைப்பு மூலம் சாண்ட்விச், பீட்சா பர்கரிலிருந்து பிரியாணிவரை அனைத்தையும் இலவசமாக கற்றுக்கொள்ள வாரம்தோறும் 40 பேரை அனுப்பி வைக்கிறார். கலந்துகொள்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழும் 1800 ரூபாய் பணமும் அரசு சார்பில் கொடுக்கப்படுகிறது. ஆர்வமுள்ள ஆண் பெண் யார் வேண்டுமென்றாலும் சுகா நிறுவனத்தினை  9500148840 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.