1950-ம் ஆண்டு போடப்பட்ட நல்லுறவு ஒப்பந்தத்தின்படி நேபாளத்தவருக்கு இங்கே உள்ளே வர, தங்க, பணிபுரிய விசா உள்ளிட்ட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இமயமலையின் அடிவாரத்தில், இந்தியாவுக்குள் நெற்றிப்பட்டை மாதிரி நீளும் நேபாளத்தை அண்டை நாடாக இந்தியா எப்போதும் நினைத்ததில்லை. ஆனால், திடீரென்று எல்லையில் 335 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைச் சொந்தம் கொண்டாடி, தங்கள் நாட்டின் அரசியல் சட்டத்தையே திருத்தும் அளவுக்கு நேபாளம் இப்போது போக, திகைத்து நிற்கிறது இந்தியா.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள எல்லை தொடங்கும் இடத்தில், சீன எல்லையை ஒட்டிய ஒரு முக்கோணப் பகுதியே இப்போதைய சர்ச்சையில் சிக்கியுள்ள நிலப்பரப்பு. காலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா ஆகிய மூன்று பகுதிகளையும் சேர்த்து நேபாளம் சொந்தம் கொண்டாடுகிறது. ‘மகாகாளி நதிக்குக் கிழக்கே இருக்கும் பகுதிகள் நேபாளம். மேற்கே இருப்பவை இந்தியப் பகுதி’ என்பது பிரிட்டிஷ் காலத்திலேயே பேசித் தீர்க்கப்பட்ட விஷயம். ஆனால், அந்த நதி இமயமலையில் எங்கு உற்பத்தியாகிறது என்பதை இரண்டு நாட்டு அதிகாரிகளும் வெவ்வேறு இடங்களைக் காண்பித்து சிக்கலை வளர்த்தனர்.

ஜூ.வி பைட்ஸ்

‘இந்தப் பகுதிகள் நேபாளத்துக்குச் சொந்தம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பத்திரப் பதிவு ஆவணங்கள், வரி ரசீதுகள் உள்ளன. 1958-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இந்தக் கிராமங்களின் மக்களுக்கு நேபாளத்தில் ஓட்டு இருந்தது. 1961 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இவர்கள் நேபாள மக்களாகக் கணக்கிடப்பட்டனர். 1962-ம் ஆண்டு இந்தியா-சீனா போர் வந்தபோது, தங்கள் ராணுவத்தினரை இங்கே நிறுத்திக்கொள்ள இந்தியாவுக்கு அனுமதி தந்தோம். இந்தியாவின் பாதுகாப்பு கருதி நாங்கள் தந்த அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி, நிரந்தரமாக இந்தப் பகுதியை இந்தியா சொந்தம் கொண்டாடுகிறது’ என்பது நேபாளத்தின் புகார்.

– இந்தப் பிரச்னையின் முழு பின்னணியை வாசிக்க க்ளிக் செய்க… > எங்க ஏரியா… உள்ளே வராதே! – கூர்க்கா தேசத்தின் கூக்குரல் https://bit.ly/2Y9W84O

கே.பி.ராமலிங்கம் – எடப்பாடி ‘மீட்’ பின்னணி

”தி.மு.க-வில் சில மூத்த தலைவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாமே?”

”ஆமாம். ‘கட்சியைப் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் அவரின் மருமகன் சபரீசன் சொன்னதாகத் தகவல் கசிந்துள்ளது. மூத்த தலைவர்கள் தரப்பிலோ, ‘வயதானவர்களால்தான் கருணாநிதி முதல்வரானார். நீங்கள் 2016-ம் ஆண்டு தேர்தலைக் கையிலெடுத்து தோல்விதானே கிடைத்தது’ என்று வருத்தத்தோடு சொன்னார்களாம்.”

”தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட கே.பி.ராமலிங்கம் முதல்வர் எடப்பாடியை சந்தித்திருக்கிறாரே?” என்ற கேள்வியுடன் ஹாட் பாக்ஸிலிருந்த கொழுக்கட்டையைச் சுடச்சுடத் தட்டில் நிரப்பினோம். “டயட்டில் இருக்கிறேன் என்பது தெரியாதா?” என்று பொய்க் கோபம் காட்டிய கழுகார் கைநிறைய கொழுக்கட்டையை அள்ளிக்கொண்டு, ”விவசாயிகள் பிரச்னை என்று ராமலிங்கம் விளக்கமளித்தாலும், அரசியல் ரீதியாகத்தான் அதிகம் பேசப்பட்டதாம்” என்று கொழுக்கட்டைகளைச் சுவைத்தபடியே தொடர்ந்தார்.

ஜூ.வி பைட்ஸ்

“தி.மு.க-வில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துக்கு எந்தெந்த நிறுவனங்களிலிருந்து பணம் வசூலித்தார்கள் என்று மாவட்டவாரியாக கே.பி.ராமலிங்கம் லிஸ்ட் எடுத்துள்ளாராம். இதுபோக உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் டெண்டர் எடுத்துள்ள தி.மு.க நிர்வாகிகளின் பட்டியலை ராமலிங்கத்திடம் முதல்வர் தரப்பு தந்துள்ளது. இரண்டையும் வைத்துக்கொண்டு தி.மு.க-வைக் கடுமையாகத் தாக்குவதுதான் கே.பி.ராமலிங்கத்தின் திட்டமாம். ‘நாம் நேரடியாகத் தாக்குவதைவிட, அவர்களில் ஒருவராக இருந்தவரே தாக்கினால்தான் எடுபடும்’ என்று ராமலிங்கத்துக்குக் கொம்புசீவி விட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.”

– ஜூனியர் விகடன் கழுகார் அப்டேஸ் முழுமையாக இங்கே > மிஸ்டர் கழுகு: சாலை ஒப்பந்ததாரர்களை மிரட்டும் அமைச்சர்! – டெல்டாவில் கிளம்பும் வம்பு https://bit.ly/30N5Yve

பிரதமருக்கு கோவணாண்டியின் கடிதம்

அது கிடக்கட்டும் மோடிஜி…

உங்க அணா காசு மந்திரி, அதுதாங்க உங்க நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பைக் கேட்டு, கோவணாண்டிகள்லாம் கொதிச்சுப் போயிட்டாங்க. அடிவயிறு கலங்கி ஆடிப்போயிட்டாங்க. மூணு லட்சம் கோடி முழுசா உழவனுக்குத்தான்னு சொன்னாங்க. நானும் விளக்கெண்ணெயைக் கண்ணுலவிட்டு, தேடித் தேடிப் பார்த்தேனுங்க… ஒத்த ரூபாய்கூட உருப்படியா கோவணாண்டிக கணக்குல வரலீங்க. பழைய கணக்கயெல்லாம் (விவசாயிக்கு 6,000 ரூபா) புதிய கணக்குல சேர்த்துட்டாங்க.

பட்ட கடனைக் கட்ட முடியலை. வட்டி குட்டி போட்டு வளர்ந்து நிக்குது. தள்ளுபடி கிடைக்கும்னு தவம் கெடந்தோம். யானை குட்டி போடும், குட்டி போடும்னு காத்துக்கிட்டு இருந்தா கடைசியில பெரும் சாணியைப் போட்டுட்டுப் போன கதையா, ‘அசல் தள்ளுபடியாகும்’, ‘இல்லாட்டி வட்டியாவது தள்ளுபடி ஆகும்’னு காத்திருந்தோம். கடைசியில எங்க தலையில பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுட்டாங்க சாமி உங்க நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

அப்புறம் அம்மையார் சொல்றாங்க, ‘விவசாயியே அவங்க விளைபொருளுக்கு விலை வைத்து விற்பனை செய்யலாம்’னு… விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தோத்துட்டாரு போங்க. எங்க பொருளுக்கு இப்ப வரைக்கும் நாங்கதான் விலை சொல்றோம். ஆனா, கேட்கத்தான் நாதியில்லை. எல்லா வியாபாரிகளும் கூட்டுப் போட்டுக்கிட்டு எங்களைக் குழியில தள்ளுறாங்க. அதுக்குத்தான் அரசாங்கமே வாங்கிக்கணும்னு சொன்னாக் கேட்க மாட்டேங்கிறீங்க.

– பிரதமருக்கு கோவணாண்டி எழுதிய கடிதம் முழுமையாக இங்கே > “எங்க குமுறலெல்லாம் உங்களுக்குக் கேக்குதா மோடி ஐயா!” https://bit.ly/2CgFBDN

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.