“காவிரி – குண்டாறு ஆறுகள் இணைப்புத் திட்டத்தை விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பு இல்லாத வகையில் நிறைவேற்ற வேண்டும்” என்று கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மாயனூர் கதவணை

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம்

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டமானது, கரூர் மாயனூர் கதவணை தொடங்கி, வெள்ளாறு வரை இணைக்கும் திட்டமாகும். இந்தத் திட்டம், 2008 – ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

Also Read: `இனி நான் 3 வேளையும் அரிசி சாப்பாடு சாப்பிடுவேன்…’ – உதவிகளால் நெகிழ்ந்த மாரியப்பன்!

இதற்காகத்தான், மாயனூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே அப்போது கதவணை கட்டப்பட்டது. ஆனால், அதோடு இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், தேசிய நீர் மேம்பாட்டு முகமைத் திடத்தின் கீழ் ரூ. 7,677 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுதாக அறிவிக்கப்பட்டது.

காவிரி ஆறு

அதற்காக, சில மாதங்களுக்கு முன்பு முதல்கட்டமாக ரூ.700 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான், “விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பில்லாத வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தணும்” என்று கரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்தத் திட்டம் தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட காரணமாக இருந்த, கிருஷ்ணராயபுரம் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவான காமராஜிடம் பேசினோம்.

“காவிரியில் அதிகமாக வரும் உபரி நீரை கொள்ளிடம் வழியாக கடலில் கலக்க வைப்பதை தடுத்து, அந்த நீரை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த ஏதுவாக, எனது முயற்சியில், தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் இது. என் முயற்சியில் அதற்காக மாயனூர் கதவணை கட்டப்பட்டது. இப்போது, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறார்கள். மகிழ்ச்சி. காவிரியின் உபரிநீர் அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு வரை இணைத்து கொண்டுசெல்லப்படுதுதான் இந்தத் திட்டம்.

காமராஜ் (தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ)

அதற்காக, 255 கிலோமீட்டர் தூரத்துக்குக் கால்வாய் வெட்ட இருக்கிறார்கள். முதல்கட்டமாக, மாயனூரில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோமீட்டர் தூரத்துக்குக் கால்வாய் அமைக்க இருக்கிறார்கள். பிறகு, பிரதான கால்வாயை அக்னியாறு, நரசிங்க காவிரி, கொளுவனாறு, தெற்கு வெள்ளாறு ஆகிய காட்டாறுகளோடு இணைக்க இருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்துக்காக, மொத்தம் 1,337.31 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக இப்போது நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு, நன்றாக விளையும் நிலங்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை. ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய நிலங்களைப் பாதுகாக்க அப்பாவி மக்களின் நிலங்களை எடுக்கும் கொடுமை கூட செய்ய வாய்ப்புண்டு.

மாயனூர் கதவணை

அப்படி செய்யக்கூடாது. அதேபோல், காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தில், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள பல வருடங்களாக நீரின்றி வறண்டுகிடக்கும் பொன்னணியாறு அணை, பஞ்சப்பட்டி ஏரி, மாவத்தூர் ஏரி உள்ளிட்ட பெரிய நீர்நிலைகளுக்கும் நீர் கொண்டுபோய் சேர்க்கும் வகையில் கால்வாயை வெட்ட வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.