இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் “சீயான் 60” படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் “பேட்ட” படத்திற்கு அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “ஜகமே தந்திரம்” படத்தில் கவனத்தைச் செலுத்தி வந்தார். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த போதிலும் அரசானது ஊரடங்கு தளர்வுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

image

அந்த வகையில் அண்மையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை நடத்திக்கொள்ளலாம் என அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து படப்படிப்புக்கு அனுமதி அளித்தவுடன் சினிமா சம்பந்தமான படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சியான் விகரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை செவன் கீரீன் தயாரிப்பு நிறுவனத்தின் லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். போஸ்டரில் ஒருவர் ஒரு குழந்தைக்கு துப்பாக்கியை கொடுக்கிறார். இதன் மூலம் இந்தப் படமும் ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.