மாஸ்க் போட மறந்து போன காவல்துறை அதிகாரி தனக்கு தானே அபராதம் விதித்துக்கொண்டார்

கான்பூர் ஆய்வாளர் மோஹித் அகர்வால் தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கொரோனா தொடர்பான ஆய்வுக்குச் சென்ற அதிகாரி மோஹத் அவசரமாக வாகனத்திலிருந்து இறங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தான் மாஸ்க் அணியவில்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

image

உடனே தனது வாகனத்தில் இருக்கும் மாஸ்கை எடுத்துவரக்கூறி முகத்தில் மாட்டிக் கொண்டார். ஆனாலும் தான் செய்த தவறுக்காக ரூ.100 அபராதம் கட்டினார். அதற்கான ரசீதை அவரே நிரப்பிக்கொண்டார். மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் வேளையில் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நடந்து கொண்ட காவல் அதிகாரியைப் பலரும் பாராட்டி உள்ளனர்.

image

இது குறித்துத் தெரிவித்துள்ள காவல் அதிகாரி மோஹித் அகர்வால், நான் மாஸ்க் அணியாததை உணர்ந்தவுடன் எனக்கு நானே சட்டப்படி அபராதம் விதித்துக் கொண்டேன். இது மக்களுக்கும், காவல்துறைக்கும் முன்னுதாரணமாக இருக்குமென நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவை 20 நிமிடங்களில் கண்டறியும் கிட்” – ஹைதராபாத் ஐஐடி கண்டுபிடிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.