சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று என தகவல் வெளியான நிலையில், அவருக்கு பாதிப்பு இல்லை என மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மதுரையில் மது பானத்துக்கான ரசாயன திரவம் காய்ச்சிய மூவர் கைது
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அவசர வழக்குகள் நீதிமன்றங்களிலும், வீடியோ கான்பிரன்சிங் மூலமாகவும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நீதிமன்ற இரண்டாவது அறையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன.
’அறிகுறி இல்லாத 186 பேருக்கு கொரோனா.. டெல்லியில் சீரான வேகத்தில் பரவுகிறது’: கெஜ்ரிவால்
‘Happy birthday, My person’’: கேஎல் ராகுலை வாழ்த்தி அதியா ஷெட்டி இன்ஸ்டாவில் பதிவு
குறிப்பிடப்பட்ட மூன்று நாட்களில் நீதிமன்றத்திற்கு வந்து சென்ற அரசு வழக்கறிஞர் ஒருவரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நீதிமன்றம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சந்தேகத்துக்குரிய உதவியாளருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM