ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி உதவுமாறு இந்தியாவிடம் காலிங் பெல் அடித்துக்கொண்டிருக்கின்றன உலகநாடுகள். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒருபடி மேலே சென்று மாத்திரைகளை வழங்காவிட்டால் இந்தியாவுக்குப் பதிலடி கொடுப்போம் எனக் கொந்தளிக்க, மிரண்டது சென்ட்ரல். அடுத்ததாக தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய டெஸ்ட் கிட்களை அப்படியே மடைமாற்றி அமெரிக்காவுக்குக் கொண்டுசென்றுவிட்டார் ட்ரம்ப். இதனால் ட்ரம்புக்கு எதிராக சோஷியல் மீடியாக்களில் மக்கள் கொந்தளிக்க, நம்முடைய கோலிவுட் ஹீரோக்கள் பிரஸ்மீட்டில் கொந்தளித்தால் எப்படியிருக்கும்?

வணங்கம்டி ட்ரம்ப்பே… கோலிவுட்லருந்து!

Donald Trump

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,

இடம் : போயஸ் கார்டன் வாசல்

வணக்கம்… ட்ரம்ப் அவங்களோட அந்தப் பேட்டியை இப்பதான்… ஜஸ்ட் நவ் பார்த்து முடிச்சு கொதிச்சுப் போயிருக்கேன். `தனக்குப் போகத்தான் தானமும் தர்மும்’ அப்டினு நம்ம முன்னோர்கள் சித்தர்கள் அப்பவே சொல்லிருக்காங்க… ஸோ, டெஃபெனட்லி எங்க பிரதமர் மோடிஜி அவர்கள் இந்தியன்ஸ்க்கு யூஸ் பண்ணிட்டு மிச்ச மாத்திரேக்கள உங்களுக்குக் கொடுத்துருப்பாங்க. ஆனா அதுக்குள்ள நீங்க பதிலடி கொடுப்பேன், திருப்பி அடிப்பேன் அப்டி இப்டினு பேசுனது சம்திங் ராங், டெஃபெனெட்லி தப்பு. சுத்தமா சரியில்ல!

அதுக்காக நீங்க மன்னிப்பு கேட்டே ஆகணும். என்னாங்க இது… உலகத்தையே ஆட்டிப்படைக்கிற கொரோனா அப்டிங்கிற அந்த அரக்கனை அழிக்கிற மாத்திரே வேறெந்த கன்ட்ரிலயும் இல்லாமே நம்ம இந்தியால… அதுவும் மோடி ஜி ஆட்சியில இருக்குது அப்டிங்றது டெஃபெனட்லி ரொம்ப சந்ந்ந்தோஷமான விஷயம்.

ஒன் திங் நான் ரொம்ப பெருமைப்படறேன்… அதாவது அந்தக் காலத்துல நைன்டீன் சிக்ஸ்டீஸ் – செவன்டீஸ்ல, அமெரிக்காவோட கோதுமைக்காக இந்தியா காத்துகிட்டு இருந்துச்சி… இப்ப மோடி ஜீ அவர்களோட ஆட்சில இந்தியாவோட மாத்திரைக்காக அமெரிக்காவே வெயிட் பண்ணிகிட்டு இருக்காங்க. நிச்சயமா மோடி- அமித் ஷா அவங்க ரெண்டுபேரும் இந்தியாவே வல்லரசா மாத்திருவாங்கனு டெஃபெனட்டா நம்புறேன். அவங்களே அப்டியே உட்ருங்க… டிஸ்டர்ப் பண்ணாதீங்க… கடைசியா திரும்பவும் சொல்றேன்… மிஸ்டர் ட்ரம்ப் சொன்னது சரியில்ல… அவங்க மன்னிப்பு கேட்டே ஆகணும்… ஜெய் ஹிந்த்!

ரஜினி

தளபதி விஜய் :

இடம் : கல்லூரி கேம்பஸ்

ஹாய் நண்பா, நண்பீஸ்!

இப்பதான் நண்பர் முருகதாஸ் சொன்னார்னு அந்த பிரஸ்மீட்டைப் பார்த்துத் தொலைச்சேன். ரொம்ப டென்ஷனாகிடுச்சி… 15 நாளைக்கு முன்னாடிதான் லைஃப் இஸ் வெரி ஷாட் நண்பா… கொஞ்சம் சில் பண்ணு மாப்பின்னு சொல்லியிருந்தேன்… ஆனா அந்த ட்ரம்ப் சில் பண்ணவிடல…

நாங்க படத்துலதான் ஆளுங்கட்சிக்கும் பிரதமருக்கும் எதிரா வசனம் பேசுவோம்… ஆனா, அதே பிரதமருக்கு எதாச்சு ஒண்ணுன்னா எவன் பேச்சையும் கேட்கமாட்டோம். ச்சும்மா பிரிச்சு மேஞ்சிருவோம்.

`காய்ச்சல் போனதுக்கப்புறம் இந்தியா கைல வச்சிருக்குற அடுத்த மாத்திரை இன்னொரு நாட்டோடதுங்ண்ணா’ அப்படினு நீங்க வீராப்பா வசனம் பேசியிருந்தா ரைட்டுங்ண்ணா. எங்க மக்களே பாதிக்கப்பட்ருக்கப்ப இப்டி மிரட்டி கேட்குறது ரொம்ப தப்பு இல்லைங்கலாண்ணா… இருந்தாலும் மிரட்டிக் கேட்டீங்க பாருங்க அதுக்கு அமெரிக்கா பிரெஸிடண்ட் அப்டிங்ற பிராண்ட்தானே காரணம். அந்த பிராண்டே காலியாகிடுச்சுன்னா என்னங்ணா பண்ணுவீங்க?

இந்த ப்ரெஸ் மீட் முடிஞ்ச பத்தாவது நிமிஷத்துல மொத்தப் பேரும் இந்தியாகிட்ட மன்னிப்பு கேட்ருக்கணும்… இது எச்சரிக்கை இல்ல… இந்தத் தளபதியோட கட்டளை…

வாழ்க்கை ஒரு வட்டம் இங்க தோக்குறவன் ஜெயிப்பான்… ஜெயிக்குறவன் தோப்பான்… அதை இந்தக் கொரோனா காலத்துலயும் நீ புரிஞ்சுக்கல… அரசு, ஸாரி… ட்ரம்பு சீக்கிரம் புரிஞ்சுக்குவீங்க!

அஜித் – விஜய்

`தல’ அஜித் குமார்

இடம் : நேரு உள்விளையாட்டரங்கம்

டியர் ட்ரம்ப்…

நம்மகூட இருக்கவங்கள நாம பார்த்துக்கிட்டா, நம்மளை மேல இருக்குறவன் பார்த்துக்குவான்னு `வீரம்’ படத்துல ஒரு டயலாக் வருங்கய்யா… ஆனா, அந்த மேல இருக்குறவனே நம்மளை மிரட்டி அடிச்சுப் பிடுங்க நினைச்சா என்னங்கய்யா பண்றது.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கோடி கோடியா கொட்டி பிரமாண்டமா உங்களை இந்தியாவுக்கு வரவேத்து… சூச்சின் டெண்டல்கர், விவேகானோனாந்தானு உங்க டங் ட்விஸ்ட்டையெல்லாம் நட்புக்காகப் பொறுத்துக்கிட்டு இருந்தாரே மோடி, அவரையே மிரட்டி முதுகுல குத்துறீங்களே… இது நியாயமா!?

ஹைட்ராக்சிகுளோரோகுயின் டேப்லெட் ஒவ்வொண்ணும் நாங்களா உருவாக்கி செதுக்குனது மைடியர் டொனால்டு. அதை ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டு வாங்குங்க. அதுதான் நல்ல பண்பு.

வாழு… வாழ விடு !

தனுஷ்

இடம் : இன்ஜினீயரிங் கல்லூரி வாசல்

“அடக்கம் அமரருள் உய்க்கும்… அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்” – இது எங்க அய்யா திருவள்ளுவர் சொன்னது… இதை உங்களுக்கு யாரும் எப்படி சொல்லாமவிட்டாங்கன்னு தெரியல. எண்ணம் போல வாழ்க்கை… எண்ணம் போல்தான் வாழ்க்கை… எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைச்சாதான் நீங்க நல்ல தலைவர்… இல்லைன்னா ரொம்ப கெட்ட தலைவர்னு நான் சொல்லல… உலகமே சொல்லிடும். புரிஞ்சி நடந்துக்கங்க… எல்லாமே இறைவன் செயல்ன்னு நினைக்கிறவரைக்கும்தான் நாம… இல்லைன்னா ஒண்ணுமே இல்ல. அன்புதான் எல்லாம். நமக்கு அன்பு தர்றாங்களா திரும்ப அன்பு தருவோம். நமக்கு வெறுப்பத் தர்றாங்களா நாம டபுள் மடங்கா அன்பையே திருப்பித் தருவோம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்.

தனுஷ்

சிம்பு:

இடம் : டிஆர் வீட்டு பால்கனி

ஏங்க…. நாலு வயசா இருக்கும்போதே எங்கப்பா சட்டைல தேசியக்கொடிலாம் குத்திவிட்ருக்காருங்க… எனக்கும் தேசப்பற்று பிரதமர் பாசம் எல்லாம் இருக்குங்க. நம்ம நாட்டுக்குப் பதிலடி கொடுப்போம்னு இன்னொரு நாட்டு பிரதமர் சொல்றாருன்னா ஒரு இந்தியனா எனக்குக் கொதிக்குதுங்க….

எனக்கும் பிரதமர் மோடிக்கும் பெரிய வித்தியாசம் இல்லங்க… நான் AAA பண்ணேன்…அவர் CAA பண்ணாருங்க…

அதனால அவருக்கு ஒண்ணுன்னா நான் கேட்பேன்.

இப்டிதான் AAA பண்ணும்போது என்னைப் பத்திப் பின்னாடி பேசுனாங்கங்க… அப்டி இருந்தும் இன்னைக்கு இந்தத் தமிழன் நிக்குறான்னா அதுக்கு அவங்கதாங்க காரணம்…

தெரியும்ங்க… இந்த STR எல்லாம் பேசுவாங்க… ஏன்னா என் அப்பா TR எனக்கு எல்லாம் சொல்லிகொடுத்துருக்காருங்க… அவர் ஒரு தமிழன் அதனால நான் ஒரு தமிழன்… மொத்ததுல என் குடும்பத்துல எல்லாரும் இந்தியங்க.

நாளைக்கு சாயங்காலம் 5 மணிக்கு அமெரிக்கால இருக்குற எல்லா இந்தியர்களும் அமெரிக்கன்ஸ்க்கு ஒரு கிளாஸ் தண்ணி கொடுங்கங்க…. ஓ க்வாரன்டீன்ல வெளில வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்கள்ல… இதுகூட நல்லதுதாங்க.

உங்க வீட்டு பால்கனில நின்னு நீங்களே ஒரு கிளாஸ் தண்ணி குடிங்க… அத போட்டோ எடுத்து இந்த STR க்கு அனுப்புங்கங்க.

ஃபர்ஸ்ட்டு யாரு வர்றாங்கிறது முக்கியம் இல்ல… லாஸ்ட்டுல யாரு ஃபர்ஸ்ட்டு வர்றாங்கிறதுதான் முக்கியம்…

நன்றி மறக்காத தமிழங்க…

நன்றிங்க!

Simbu

சமுத்திரக்கனி :

இடம் : நடுநிலைப்பள்ளி கொடிக் கம்பம்

ஏன் சார்… ட்ரம்ப்பை எல்லாரும் யேசுறீங்க… ஏதோ சின்ன வயசுல அவருக்கு ஏற்பட்ட கரடுமுரடான சம்பவங்களால அவர் இப்டி மாறிப்போயிருக்காரு. தப்புதான்… மிரட்டி உருட்டி மாத்திரை கேட்டது தப்புதான்… அதுக்குன்னு அவரை ஒரு வாரம் கன்டென்ட்டாக்கி மீம் போட்டா சரியாகிருமா? அவரைத் தனியா கூப்பிட்டுப் போய் பேசுங்க. அவர் மேல அன்பு காட்டுங்க. அவருக்கு இந்த உலகமும் மக்களும் எவ்வளவு அழகானதுன்னு புரியவைங்க. அவரை அவரா இருக்கவிடுங்க. சிரிச்சா மிக்கி மவுஸ் மாதிரி இருக்குற அந்த மனுஷனோட இதயத்தைப் பாருங்க…

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

வாழ்க இந்தியா!

#GameCorner

கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.