மதுரை மாவட்டத்தில் இன்று மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வரலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அப்படி வெளியே வருபவர்களும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று தொடர்ந்து கூறப்படுகிறது.
ஆனால் பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் இன்று மீன் மற்றும் இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்
சவுதி அரேபியா மன்னர் குடும்பத்தில் 150 பேருக்கு கொரோனா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM