கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பலர், மீண்டும் தொற்றுக்கு ஆளாகி வருவது குறித்த தகவல்களை ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 18,17,968 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அத்துடன் 1,12,370 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதேசமயம் 4,16,127 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு வருமா ? என்ற கேள்வி மருத்துவ உலகில் எழுந்துள்ளது.
இந்நிலையில் தென்கொரியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில், 91 பேர் மீண்டும் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதேபோல், பிற நாடுகளில் இருந்தும் உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நோய் தொற்றில் இருந்து மீண்டவர்கள், மீண்டும் பாதிக்கப்படுவது குறித்து மருத்துவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் தந்தையைக் கொன்றவருக்கு தூக்கு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM