திருச்சியில் விதிமீறிய 2,157 வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார்
காவல்துறையினருக்காக தயாராகும் உணவு.
பாதுகாப்புப் பணியில் போலீஸ்.
காவல்துறையினருக்கு மாஸ்க் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்படுகின்றன.
ஆட்டோக்கள் மூலம் வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் மதுரை காவல் துறை.
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பணியில் அனைத்து பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பழங்கள் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் எம் வி எம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி சுரங்க நடைபாதை.
மதுரை ரயில்வே கோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு வார்டாக மாற்றம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
ஊட்டியில் தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என சுமார் 500 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய நகராட்சி ஒப்பந்ததாரர்.
ஊட்டி நகராட்சி சந்தை சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இறைச்சி கடைகளில் இரண்டு வாத்துகள் மட்டும் உணவின்றி கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களை நீண்ட நேரம் காத்திருந்து வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
விழுப்புரம் திருச்சி சாலை இரவு நேரம் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது
தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மதுரையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்
அம்மா உணவகத்தை ஆய்வு செய்த அமைச்சர் செல்லூர் ராஜு
அம்மா உணவகத்தில் ஆய்வுக்கு பின் அங்கேயே உணவை சாப்பிட்ட அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மாநகர ஆணையர் விசாகன்.
வட மாநில லாரி ஓட்டுநர்கள் தங்களது லாரிக்கு அடியிலே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர்
விர்ச்சுவல் ரியாலிட்டி திரையின் மூலம் கண்காணிக்கும் போலீஸார்.
எப்போதுமே கூட்டமாக காணப்படும் கிண்டி ரயில் நிலையம்.
ஆள் நடமாட்டம் இல்லா சென்னை அண்ணா சாலை
அண்ணா சாலையில் வாகன ஓட்டிகளை நிறுத்தி வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தும் காவல் துறையினர்
விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் பெண்.
நெல்லையில் தீயணைப்பு வாகனம் முலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
நெல்லை ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவதற்காக பெட்டிகளைச் சுற்றி கொசுவலை அடிக்கப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து வந்த அரசி, ரேஷன் கடைக்கு சப்ளை செய்யப்படுவதற்காக லாரியில் ஏற்றப்படுகிறது.
நெல்லை ஜன் தன் கணக்கில் பிரதமர் மோடி அறித்த பணத்தை வாங்க நரிக்குறவ பெண்கள் குழந்தைகளோடு வங்கி முன் காத்திருந்தனர்.
அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கும் ராமநாதபுரம் ஆட்சியர்.
ராமேஸ்வரத்தில் அம்மா உணவகத்தில் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் .
நடமாடும் காய்கறி வண்டிகள்.
மதுரை அரசு ராஜாஜி சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் சாலையில் பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள்.
நாகர்கோவிலில் வீதிகளில் தேவையில்லாமல் நடமாடும் மக்களை எச்சரிக்கும் போலீஸார்.
வாழைப்பழ விலை சரிவால் அதிகமாக வாங்கி செல்லும் வியாபாரிகள்.
கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்பே ஏடிஎம்-ல் பணம் எடுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
காரைக்குடியின் முக்கிய பகுதிகளில் தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
சானிடைசர்கள் பயன்படுத்தும் காவல்துறையினர்
கையுறை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கேஸ் விநியோகம் செய்யும் ஊழியர்கள். இடம்: தஞ்சை.
ஊரடங்கு இருப்பதால் கோடம்பாக்கம் பகுதியில் தெரு நாய்களுக்கு உணவும் பூனைகளுக்கு பாலும் வழங்கிவரும் பெண்.
காந்தி சிலைக்கு மேல் அழகாக காட்சியளிக்கும் நிலா.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.