கார், பைக்குகளில் ஆனந்தமாகச் சுற்றித்திரிந்த ஆட்டோமொபைல் ஆர்வலர்களை எல்லாம் வீட்டுக்குள் அடைத்துவிட்டது கொரோனா. நேஷனல் ஜியாக்ரஃபியும், ஹிஸ்ட்ரி டிவியும் ஆட்டோமொபைல் சார்ந்த நிகழ்ச்சிகளைக் குறைத்துவிட்டார்கள். என்னதான் செய்யலாம் என மண்டையைப் பிய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சில பெட்ரோல் விரும்பிகளைக் குஷியாக்க ஆடி நிறுவனம் தனது தொழிற்சாலையைச் சுற்றிக்காட்டுகிறது. சும்மா இல்லை. பிரமாண்டமாக, நேரடியான உரையாடலோடு நிஜ மனிதர் உங்களுக்குத் தொழிற்சாலையைச் சுற்றிக்காட்டுவார்.

ஆடி தொழிற்சாலை

ஜெர்மனியின் பவாரியாவில் இருக்கும் 676 ஏக்கர் தொழிற்சாலையையும் உங்களோடு உரையாடிக்கொண்டே சுற்றிக்காட்டுவார் ஆடி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர். கைகளில் வரையப்பட்ட கார் எப்படி சாலைக்கு வருகிறது, எங்கே டெஸ்ட் செய்கிறார்கள், எப்படி பெயின்ட் அடிக்கிறார்கள், காரின் பாதுகாப்பை எப்படிச் சோதிக்கிறார்கள் என்ற அத்தனை விஷயங்களையும் நேரலையில் பார்க்கலாம். இந்தப் புதிய முயற்சிக்கு ‘ஆடி ஸ்ட்ரீம்’ (Audi stream) என்று பெயரிட்டுள்ளார்கள்.

ஆடி தொழிற்சாலை

வாடிக்கையாளர்களால் வீட்டிலிருந்தபடியே தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் கார்களை டிஜிட்டல் வடிவத்தில் காணலாம்.

ஆடி தொழிற்சாலை

Also Read: பாண்டா கரடி, பிரிட்டிஷ் மியூசியம், ஜப்பான் சுமோ- வீட்டுக்குள் இருந்தபடி உலகம் சுற்றலாம்!

வாடிக்கையாளர்களுக்கு விர்ச்சுவல் வடிவில் காஸ்ட்லியான ஆடி கார்களின் உற்பத்தியைப் பார்த்து அனுபவிக்க உதவுகிறது. அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் விர்ச்சுவல் சுற்றுப்பயணத்தை ஒரு ஸ்டூடியோவிலிருந்து நேரடியாக விவரிப்பார்கள். மேலும், வாகனத் தயாரிப்பு செயல்முறைகளைக் காணொலிக் காட்சிகள் வழியாக விளக்குவார்கள். கார் உற்பத்தியின் தொடக்கத்திலிருந்து இறுதியாக எல்லா பாகங்களையும் ஒன்றிணைக்கும் வரை வீடியோவில் காண்பிக்கப்படும்.

ஆடி தொழிற்சாலை டூர்

இவைதவிர, விர்ச்சுவலாக வாகனத் தொழிற்சாலையில் சுற்றுலா வருபவர்கள், உங்கள் வழிகாட்டிகளுடன் கலந்துரையாடலாம். கார் சார்ந்த கேள்விகள் எல்லாவற்றுக்கும் இவர்கள் பதில்சொல்வார்கள்.

ஆடி தொழிற்சாலை டூர்

ஆடியின் இந்த லைவ் டூர் சுமார் 20 நிமிடங்கள் வரை இருக்கும். மேலும், சுற்றுலா வழிகாட்டிகள், விர்ச்சுவல் சுற்றுலாவில் பங்கேற்பவர்களின் ஆர்வத்தின் அடிப்படையிலேயே தொழிற்சாலையைச் சுற்றிக் காட்டுவார்கள். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் www.audi.stream வழியாக விர்ச்சுவல் வடிவில் ஆடி கார் செய்வதைக் காணலாம்.

ஆடி தொழிற்சாலை டூர்

இது இலவசம் என்றாலும் இணையத்தில் முன்பதிவு செய்கொள்பவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கமுடியும். ஆங்கிலம், ஜெர்மன், டச் போன்ற பல மொழிகளில் இருப்பதால் ஆங்கிலம் இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து டிக்கெட் வாங்குங்கள். சப்டைட்டில் எல்லாம் கிடையாது. ஆடியைச் சுற்றிப்பார்க்க ரெடியா?

#GameCorner

கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.

வடிவேலு ஆர்மியா நீங்கள்…? Click and check!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.