உலகம் முழுவதும் பெருந்தொற்று பரவியுள்ளதால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. தனிமனித இடைவெளியைப் பின்பற்றி வருவதால், உறவினர்களைக்கூடச் சந்திப்பதில்லை. அன்றாட அத்தியாவசிப் பொருள்களைக்கூட கிருமித்தொற்று இல்லாமல் வாங்குவதற்கு முயல்கிறோம். பார்க்கும் பொருளெல்லாம் கிருமித்தொற்று இல்லாமல் இருக்க வேண்டுமே என்ற பயம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அன்றாடம் ஏதாவது ஒரு வகையில் நாம் கையாளும் பணம்தான் அது.

விகடனின் கொரோனா அப்டேட்ஸ் பக்கத்தில் இதைப்பற்றி கல்யாண சுந்தரம் என்ற வாசகர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது ரூபாய் நோட்டுகளைக் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்க எப்படிச் சுத்தம் செய்வது? கிருமிநாசினியுடன் தண்ணீரைக் கலந்து அதில் முக்கி எடுத்தால் கிருமிகள் நீங்கிவிடுமா என்று கேட்டிருக்கிறார்.
இது தொடர்பாக விளக்கமளிக்கிறார் பொது மருத்துவர் ஹெச்.விஷால்.
“ரூபாய் நோட்டுகளால் கொரோனா வைரஸ் பரவியதாக இதுவரை எங்கும் நிரூபிக்கப்படவில்லை. ரூபாய் நோட்டுகளைக் கையாள்பவருக்குக் கொரோனா பாதிப்பு இருந்தால் தவிர, அவற்றிலிருந்து வைரஸ் பரவும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவே. எனினும் நோய்ப் பரவல் அதிகமாக இருக்கும் சூழலில் எதையும் அலட்சியாகக் கையாளக்கூடாது.

பொது மருத்துவர்
இந்த நேரத்தில் ஆன்லைன் பரிமாற்றம், டிஜிட்டல் பரிமாற்றங்களை முடிந்த வரையில் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் கைகளை நன்றாக சோப் போட்டுக் கழுவ வேண்டும். உதாரணமாக, கடைக்குச் செல்லும்முன்பும், அங்கு சென்ற வந்த பிறகும் உடனடியாக கைகளைக் கழுவிவிட வேண்டும். பணத்தைப் புழங்கும் நேரத்தில் முகத்தில் கைகள் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
Also Read: கொரோனா பரிசோதனையை கட்டணமில்லாமல் செய்யவேண்டும் – உச்சநீதிமன்றம்
#Corona அப்டேட் #NowAtVikatan
ரூபாய் நோட்டுகளைச் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும் என்றால் அதனைத் தண்ணீரில் கழுவுவது சரியாக இருக்காது. அதனால் அயர்ன்பாக்ஸை சூடாக்கி அதில் ரூபாய் நோட்டுகளைத் தேய்க்கலாம். அதிலிருக்கும் அதிக வெப்பத்தில் கிருமிகள் அழிந்துவிடும். சில்லறை நாணயங்களை சோப் தண்ணீரில் கழுவி, காய வைத்துப் பயன்படுத்தலாம்.

டெபிட், கிரெடிட் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்தும்போது அவற்றிலும் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது. அதனால் ஆல்கஹால் சேர்ந்த ஹேண்ட் சானிடைஸர்களை, பஞ்சு அல்லது துணியில் தோய்த்து, கார்டுகளை அவ்வப்போது சுத்தப்படுத்தலாம்” என்றார்.
பொருள்களைச் சுத்தப்படுத்துவதைக் காட்டிலும் சுய சுகாதாரமே தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் பிரதான ஆயுதம் என்பதையும் மறக்கக் கூடாது.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.