தேனியில் இன்று ஒரே நாளில் 12 பெண்கள் உட்பட 16 நபர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தேனி நகரில், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருபவர்களைக் கண்காணிக்க, தேனி நகர் போலீஸார், ட்ரோன் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Also Read: `பார்த்துப் பார்த்து வளர்த்தோம்; என்ன செய்யுறதுன்னே தெரியல..!’- கலங்கும் தேனி வாழை விவசாயிகள்

ட்ரோன்

டெல்லி மாநாட்டிற்குச் சென்று ஊர் திரும்பியவர்களை கடந்த மாதம் 31ம் தேதி தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை செய்தது மாவட்ட சுகாதாரத்துறை. அழைத்துச் செல்லப்பட்ட 24 நபர்க ளில்21 நபர்களுக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 2 நபர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மொத்தத்தில், தேனி மாவட்டத்தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 16 நபர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு 53 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேனி நகர்

Also Read: `வெளி ஆட்களா… நோ என்ட்ரி; டிரம்களில் சோப்புத்தண்ணீர்!’ -தேனி கிராமங்களில் கடும் கட்டுப்பாடுகள்

முன்னதாக, தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த இருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போது, தேனி புதிய பேருந்துநிலையத்தில் இயங்கிவந்த உழவர் சந்தையை மூடியது மாவட்ட நிர்வாகம். தொடர்ந்து, தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட, வி.எம் சாவடி தெரு, வடக்கு தெரு, பள்ளிவாசல் தெரு, சொக்கம்மன் தெரு, அம்பேத்கார் தெரு, அழகர்சாமி தெரு, கீரைக்கல் பஜார் தெரு, என்.ஆர்.டி நகர், பாரஸ்ட் ரோடு ஆகிய பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், தேனி நகரில் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருபவர்களைக் அறிந்துகொள்ள, ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர் தேனி போலீஸார்.

ட்ரோன்

Also Read: முள், கட்டை, கற்களால் அடைக்கப்பட்டுள்ள தெருக்கள்! – திணறும் தேனி சுகாதாரத்துறையினர்

இது குறித்து போலீஸார் கூறும் போது, “தேனியில் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், இன்னும் சிலர் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்து, வழக்குப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.