நேரம் போகாமல் டீ கடைக்குச் சென்று அரட்டை அரங்கத்தில் ஈடுபடும் முதியவர்கள் முதல் ஃபேன்சியான காபி ஷாப்புகளில் கடலை போடும் இளைஞர்கள்வரை அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிற நிலை. ‘எப்படிடா இன்னிக்குப் பொழுதைக் கழிப்பது’ என்று மனக்கணக்குப் போட்டுக்கொண்டு இணையதளங்களில் நாள்களை நகர்த்துபவர்கள் அதிகம். ஆனால் சிலரோ, வீட்டிலிருந்தபடியே தினம் தினம் வித்தியாசமான, எளிமையான ரெசிபிக்களைச் செய்து தங்களின் க்வாரன்டீன் நாள்களை சுவாரஸ்யமாய் நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், தற்போது அனைவரின் சமூக வலைதளப் பக்கங்களையும் நிரப்பிக்கொண்டிருப்பது ‘டல்கோனா காபி’.

Dalgona coffee

ஏற்கெனவே நம் நாட்டில் பிரபலமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள் கலந்த பால், ‘டர்மரிக் லாட்டே (Turmeric Latte)’ என்று மேற்கத்திய நாடுகளால் பின்பற்றப்பட்டது. அதேபோலத்தான் இந்த டல்கோனா காபியும். நம் நாட்டில் பிரபலமான பீட்டன் காபிதான் (Beaten Coffee), டல்கோனா காபி என்ற விவாதங்களும் தற்போது எழுந்துள்ளன. டால்கோனாவில் டாப்பிங் செய்யப்படும் காபி மிக்ஸர், பீட்டன் காபியில் மெயின் இன்க்ரீடியன்ட்.

வாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது ட்ரெண்டாகி வரும் டல்கோனா காபி, தென் கொரியாவிலிருந்துதான் பிரபலமாகியுள்ளது. ஜனவரி 26-ம் தேதிவரை ‘டல்கோனா காபி’ என்ற சொல் கூகுளில் இல்லை என கூகுள் ட்ரெண்ட்ஸில் பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி பிரபல கொரியன் யூடியூபர் ஒருவர், டல்கோனா ரெசிபியுடனான காணொலி ஒன்றைப் பதிவேற்றம் செய்து ‘quarantine coffee challenge’ என்ற ஹாஷ்டேகையும் இணைத்துள்ளார். இது, 8.2 மில்லியன் வியூஸைப் பெற்று ட்ரெண்டாகியுள்ளது. இதன் பிறகே மற்ற யூடியூப் வாசிகளும் டல்கோனா காபியின் காணொலிகளைப் பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

Turmeric Latte

உலகின் பெரும்பாலான மக்கள் க்வாரன்டீன் நாள்களில் இருப்பதால், இந்த எளிமையான ரெசிபி அனைவராலும் கவரப்பட்டிருக்கிறது. மேலும், சிறியவர்கள் முதல் முதியவர்கள்வரை இந்த டேஸ்டி காபியை முயற்சி செய்து, அதனைக் காணொலியாகவும் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். டல்கோனா காபி கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட சகாப்த பக்கத்தில் நிச்சயம் இடம்பெறும்.

“நீங்களும் வீட்டிலிருந்தபடியே இந்த வித்தியாச ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்” என்றபடி டல்கோனா காபி ரெசிபியை நம்மோடு பகிர்ந்துகொண்டார் சென்னை ஹயாத் ரீஜென்ஸி ஹோட்டலின் தலைமை செஃப் தேவகுமார்.

Chef Deva Kumar

தேவையான பொருள்கள்:

பால் – 3/4 கப்

ஐஸ்கட்டி – 2-3 கட்டிகள்

சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்

இன்ஸ்டன்ட் காபி தூள் – 2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன்

க்வாரன்டீன் நாள்களை ஸ்பெஷலாக்கும் டல்கோனா காபி… வீட்டிலேயே செய்வது எப்படி?
செஃப் தேவகுமார் #Quarantine #DalgonaCofee

Posted by Vikatan EMagazine on Saturday, April 4, 2020

செய்முறை:

காபி தூள், தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து க்ரீம் பதத்திற்கு வரும்வரை சுமார் 10 நிமிடங்களுக்குக் கைவிடாமல் நன்கு அடித்துக்கொள்ளவேண்டும். இனிப்பு கொஞ்சம் அதிகம் தேவைப்படுகிறவர்கள் கூடுதலாகச் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். ஒரு கிளாசில் குளிர்ந்த பாலை ஊற்றி அதில் ஐஸ் கட்டிகளைச் சேர்த்துக்கொள்ளவும். அதன் மேலே, நாம் தயாரித்து வைத்திருக்கும் பீட்டன் காபி மிக்ஸரைச் சேர்த்தால், டல்கோனா காபி தயார். இந்த லாக்-டவுன் நாள்களை சுவாரஸ்யமாக்கும் இதுபோன்ற ரெசிபிக்களை உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுக்குச் செய்து கொடுத்து அசத்துங்கள்.”

Also Read: `கொரோனா’வால் மட்டன் பிரியாணி பயமா..?! பலாக்காய் பிரியாணி இருக்கே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.