சீர்காழி நகரில் இரவு நேரங்களில் வீதியில் சுற்றித்திரியும் ஆதரவற்ற தெருநாய்களுக்கு உணவு வழங்கியும், காயம்பட்ட நாய்களுக்கு மருந்தளித்தும் பெண் நீதிபதி உதவி வருகிறார்.

image 

கொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

உலகையே நிலைகுலைய செய்திருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொது மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அவர்கள் வேளியே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாடம் பிழைப்பு நடத்தும் ஊழியர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல் தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளும் உணவுக்கு அல்லோல்படும் நிலைமை உருவாகியுள்ளது. அவைகளுக்கு, காவல்துறையினர், தன்னார்வலர்கள் பலரும் தங்களால் இயன்ற உணவை வழங்கி வருகின்றனர்.

image

சுகாதாரப் பணியாளர்களுக்கு இடையூறு : தெலங்கானாவில் கவுன்சிலர் கைது

அந்த வகையில் நாகை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரியும் உணவின்றி தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவு வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காகவே இரவு நேரங்களில் கடை வீதிகளுக்கு சென்று, சாலையில் ஆதரவின்றி சுற்றிதிரியும் நாய்களுக்கு தினமும் உணவு வழங்குகிறார். அத்துடன்
காயம்பட்ட தெரு நாய்களுக்கு மருந்து அளித்தும் அவற்றை பராமரித்தும் வருகிறார். நீதிபதியின் மனிதநேயம் காக்கும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.