பிரதமரின் கோரிக்கையை ஏற்று கொரோனா யுத்தத்தில் மக்களின் ஒற்றுமையை காட்ட இன்றிரவு மின் விளக்குகளை அணைக்கும் நிகழ்வு. அனைத்து மின் சாதனங்களையும் அணைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் கோரிக்கை.
தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 485ஆக உயர்வு – உயிரிழப்பு 3ஆனது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3ஆயிரத்தை கடந்தது. 213 பேர் குணமடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்.
ஊரடங்கு உத்தரவு: 1000 கி.மீ நடந்தே திருச்சி வந்த இளைஞர்கள்..!
மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் நேரம் மேலும் குறைப்பு. பகல் ஒரு மணி வரை மட்டுமே இயங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
கொரோனா விவகாரத்தில் கேரள கர்நாடக எல்லைகளை திறப்பதற்கு எடியூரப்பா எதிர்ப்பு. மரணத்தை விரும்பித் தழுவுவதற்கு சமமானது என காட்டமான கருத்து.
சுகாதாரப் பணியாளர்களுக்கு இடையூறு : தெலங்கானாவில் கவுன்சிலர் கைது
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்குகிறது.
அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்களில் ஏராளமான உயிரிழப்பு நேரிடும் என அதிபர் ட்ரம்ப் அச்சம். கொரோனாவுக்கு தேவையான மருந்துகளை வழங்குமாறு இந்திய அரசிடம் கோரியுள்ளதாக பேட்டி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM