பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹரில் உள்ள அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பணியாற்றி வருபவர் மருத்துவர் குர்பல் கடாரியா. இவரும் இவரது குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 பேருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவர் கட்டாரியாவின் மனைவி ஹோஷியார்பூர், சிவில் மருத்துவமனையில் பல் மருத்துவராக உள்ளார். கட்டாரியா கடைசியாக அவரது குடும்பத்தை 2 வாரங்களுக்கு முன்பு பார்த்து வந்துள்ளார். அப்போதும் வீட்டின் வாசலிலேயே நின்று பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டதாகக் கூறுகிறார்.

அவர் பேசுகையில், “நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிற்குள் நுழையவில்லை, அவர்களைப் பார்த்துவிட்டு பின்னர் வேலையைச் செய்யத் திரும்பினேன். எனது மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் என்னிடம் கவனமாக இருங்கள் என்று கூறுவாள். நானும் எனது மனைவியும் மக்களுக்குச் சேவை செய்வதை நினைத்துப் பெருமைப்படுவாள்” எனத் தெரிவித்தார்.

coronavirus punjab update | Corona outbreak: Punjab to suspend ...

ஊரடங்கு முடியும் வரை 200 குடும்பங்களுக்கு சாப்பாடு – ரகுல் ப்ரீத் சிங் உதவி

நவன்ஷஹரில் இதுவரை 19 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டார். நோயாளிகள் குறித்து கட்டாரியா கூறுகையில், “நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் இறப்பு குறித்தும் அடிக்கடி மருத்துவரிடம் கேட்கிறார்கள். அவர்களின் மன உறுதி மிக முக்கியம். எங்களைப் பொறுத்தவரை, இது ஒரு வழிபாட்டுத் தலம் போன்றது. எங்களுடைய நோயாளிகளின் முகங்களில் மகிழ்ச்சியைக் காணும்போது நமக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. நாங்கள் எங்கள் நோயாளிகளுக்கு ஒரு வழக்கமான ஆலோசனையை வழங்குகிறோம். பயப்பட வேண்டிய அவசியமில்லை, நன்றாக இருப்பார்கள் என்று அவர்களிடம் கூறுகிறோம். நாங்கள் அவர்களை நேர்மறையான மனநிலையில் வைத்திருக்க முயல்கிறோம். மேலும் அவர்களின் மன உறுதியை உயர்த்துகிறோம். அவர்கள் இங்கே தங்கியிருப்பதாக உணர விட மாட்டோம். அவர்கள் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது, அவர்கள் நிச்சயமாக எங்களை நினைவில் கொள்வார்கள். அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் உள்ளன” எனத் தெரிவித்தார்.

First corona death in Punjab: victim contracted it locally ...

கரவொலி எழுப்பி வீட்டுக்கு அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி – கேரள நெகிழ்ச்சி

கட்டாரியாவின் மருத்துவக் குழுவில் ஒரு நுண்ணுயிரியலாளர், கிராமப்புற மருத்துவ அதிகாரி, ஒரு மருந்தாளர் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள வீடுகளில் தங்கியுள்ளனர்.

கட்டாரியா தனது எம்.டி பட்டம் அமிர்தசரஸ் அரசு மருத்துவக் கல்லூரியில் பெற்றார். 2009 இல் பன்றிக்காய்ச்சல் வந்த நேரத்தில் பெற்ற அவரது அனுபவம் கொரோனா நோயாளிகளைக் கையாள்வதில் அவருக்கு உதவியதாகத் தெரிவிக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.