குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கண் மருத்துவரின் மகன் விஷ்மே ஷா கடந்த 2013 பிப்ரவரி மாதம் இரவு, தாறுமாறாக தன் காரை ஓட்டி சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 23 மற்றும் 21 வயது இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விபத்து

இதில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் ஆதாரங்களைக் கொண்டு, இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. விஷ்மே ஷாதான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தது உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் குஜராத் நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையில் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது விஷ்மே தரப்பு.

Also Read: கொரோனா எதிர்ப்பில் கேரளா செய்ததும், தமிழகம் செய்ய வேண்டியதும்… விரிவான அலசல்!

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய விஷ்மே தரப்பு வழக்கறிஞர், “விஷ்மே இளம் வயதுடையவர். ஏற்கெனவே அவர் 18 மாதம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டார். விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கும் தலா ரூ.1.5 கோடி வழங்கப்பட்டதால் விஷ்மேவுக்கு விடுப்பு அளிப்பதில் அவர்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அவரின் தண்டனையிலிருந்து சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.

உச்சநீதிமன்றம்

இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட் மற்றும் எம்.ஆர் ஷா அடங்கிய அமர்வு `நீங்கள் பணத்தால் நீதியை வாங்க முடியாது’ எனக் கூறி குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து விஷ்மேவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உயிரிழந்த இரு இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினருக்கு ஒரே மகன் என்பதும் தன் மகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி விஷ்மேவின் தந்தை பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குப் பணம் கொடுத்து சமரசம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.